சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து கடந்த தீபாவளியன்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். தங்கச்சி பாசத்தை மையமாகக் கொண்டு குடும்ப சென்டிமென்ட் திரைப் படமாக இப்படம் உருவாகி இருந்தது என்பது உங்களுக்கே தெரியும்.
இப்படத்தில், முக்கிய வில்லனாக ஜெகபதி பாபு நடித்திருந்தார். ஜெகபதிபாபு அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, “தற்போது வில்லன்களை ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே சித்தரித்து வருகின்றனர்”.
அண்ணாத்த படத்தில் கூட அந்த வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். ஆனால், கடைசியில் எளிதாக அந்த வில்லன் தோற்கடிக்கப்பட்டு விடுவான். இனி அந்த மாதிரியான வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்.
இதையும் படியுங்களேன்-
அவர்கிட்ட கொடுக்காதீங்க சிம்புவை கெஞ்சும் ரசிகர்கள்..! |
மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷ்டியும் மாதிரியான வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளேன். அது போல் விசுவாசம் படம் போன்ற படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…