பகத் பாசில் கதாபாத்திரம் முதலில் தனுஷுக்கு எழுதப்பட்டதாம்.! சீக்ரெட் கூறிய 'விக்ரம்' அமர்.!

தமிழ் சினிமாவுக்கு முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என தடம் பதித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ ரிலீசாக உள்ளது.
சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி சேனலிடம் பேசிய மலையாள நடிகர் பகத் பாசில், கும்பளங்கி நைட்ஸில் எனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் தனுஷுக்காக எழுதப்பட்ட கதை என்று கூறினார். ஆனால் அந்த நேரத்தில், பட்ஜெட் காரணமாக மலையாள சினிமாவில் அவரை எங்களால் வாங்க முடியவில்லை என்று ஓப்பனாக பேசினார்.
‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் பகத் பாசில் நடித்த 'ஷம்மி' கதாபாத்திம் விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்றது. அறிமுக இயக்குநர் மது சி நாராயணன் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஷேன் நிகம், அன்னா பென் மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்களேன் - விஜய் – அஜித் கிட்ட இத கேப்பீங்களா.?! பத்திரிகையாளரிடம் கொந்தளித்த சூர்யா.! இதுதான் அந்த சம்பவம்…
மேலும், நஸ்ரியா, திலீஷ் போத்தன் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது.