பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த பாலச்சந்தர்.. பின்னணியில் இப்படி ஒரு சோகக்கதை இருக்கா?!..

K Balachander
இயக்குனர் சிகரம் என்று புகழப்படும் பாலச்சந்தர், தமிழில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்குவதில் சிறந்தவராக திகழ்ந்தவர் பாலச்சந்தர். “அரங்கேற்றம்”, “அவள் ஒரு தொடர்கதை” போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் பாலச்சந்தர், பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்ததற்கு பின்னணியில் இருந்த ஒரு சோகக் கதை குறித்து இப்போது பார்க்கலாம்.

K Balachander
1972 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ, ஜெயந்தி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வெள்ளி விழா”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென பாலச்சந்தருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது.
அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் உடனே மருத்துவர்களை அழைத்து வந்தார்கள். அவரது உடல்நிலையை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், பாலச்சந்தரை உடனே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என கூறினார்கள். ஆனால் பாலச்சந்தர் அந்த நிமிடத்தில் கூட படப்பிடிப்பு நின்றுவிடுமே என கவலைப்பட்டாராம். எனினும் அப்போதே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

K Balachander
மருத்துவர்களின் அறிவுரைப்படி பாலச்சந்தரை உடனே மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் பாலச்சந்தருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல் மிகவும் பலவீனமாக இருந்தது. அவரது அருகில் அவரின் மனைவியும், ஜெமினி கணேசனும் அமர்ந்திருந்தார்கள்.
பாலச்சந்தருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் தீவிரமாக இருந்தது. அதனை சுட்டிக்காட்டிய மருத்துவர் “நீங்கள் இப்படி புகைப்பிடிப்பதினால்தான் உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது” என அவரை கண்டித்தார்.
இதனை கேட்ட பாலச்சந்தர் “இனி நான் சிக்ரெட்டை தொடமாட்டேன்” என கூறினாராம். இதனை கேட்ட மருத்துவர் “இப்படி நிறைய பேர் கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் கடைப்பிடிக்க மாட்டார்கள்” என கூறி சிரித்தாராம். மருத்துவர் சிரித்ததை பார்த்த பாலச்சந்தர் “இனி நான் சிக்ரெட் பிடிக்க மாட்டேன். இது உறுதி” என அழுத்திக்கூறினாராம்.

K Balachander
அதன் பின் மருத்துவர், இனி மூன்று மாதங்களுக்கு ஓய்வு எடுக்கவேண்டும் எனவும் குறிப்பாக எந்த விஷயத்திற்கும் அதிகமாக டென்ஷன் ஆகக்கூடாது எனவும் பல அறிவுரைகளை கூறினார்.
தன்னுடைய உடல்நிலையை நினைத்து மனதுக்குள் வருந்திய பாலச்சந்தர், இனி தன்னுடைய மிச்ச வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என சிந்தித்தாராம். அப்போது பல முக்கியமான முடிவுகளை எடுத்தாராம் பாலச்சந்தர். அதாவது இனி எக்காரணத்தைக் கொண்டும் சிக்ரெட் பிடிக்கக்கூடாது எனவும், இனிமேல் பிசியான நடிகர்களை வைத்து படம் இயக்கக்கூடாது, புது முகங்களை வைத்துத்தான் படம் எடுக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தாராம்.
இதையும் படிங்க: விஜய்யை பீட் செய்ய ஓயாமல் போராடிய சூர்யா!.. என்னவெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க!..

K Balachander
மேலும் மிக முக்கியமாக, இனி தான் இயக்கவுள்ள திரைப்படங்களில் சமூகத்துக்கு எதாவது நல்ல செய்தி சொல்ல வேண்டும் எனவும், குறிப்பாக பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை இயக்க வேண்டும் எனவும் முடிவு செய்தாராம். அவ்வாறு அவர் இயக்கிய திரைப்படம்தான் “அரங்கேற்றம்”. அதன் பின் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திரைப்படங்களை இயக்கினார் பாலச்சந்தர்.