படத்தை பார்த்து திருப்தியடையாத தயாரிப்பாளர்! ரஜினியின் சூப்பர் ஹிட் படத்திற்கு வந்த சிக்கல்
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் மிகவும் சிறப்பு பெற்றவர். கர்நாடகாவை சார்ந்தவர் என்றாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைவாக குடி பெயர்ந்தவர் ரஜினிகாந்த். ஒரு சினிமா இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வந்து தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் இன்று வரை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.
கில்லாடியான ரஜினி
ரஜினி நடித்த ஒவ்வொரு படங்களிலும் அவருடைய ஹியூமர் சென்ஸ் அற்புதமாக இருக்கும். ஹியூமர் செய்து கொண்டு நடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஒரு மாஸ் ஹீரோ அந்த மாதிரி நடிப்பது என்பது கஷ்டம். ஆனால் ரஜினி அன்றிலிருந்து இன்று வரை ஹியூமர் சென்சை தன்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கொண்டு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரஜினியின் படங்களில் மிகவும் வெற்றியடைந்த படம் மனிதன். அந்தப் படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். மனிதன் படத்தில் இப்போது உள்ள கிளைமாக்ஸ் காட்சியை முதலில் முத்துராமன் படமாக்க வில்லையாம். வேறொரு கிளைமேக்ஸ் காட்சியை தான் வைத்திருந்தாராம்.
படத்தை பார்த்து திருப்தியடையாத சரவணன்
அப்பொழுது அந்த படத்தை ஏவிஎம் சரவணனை பார்க்க அழைத்திருந்தாராம் முத்துராமன். ஏவிஎம் சரவணன் படத்தைப் பார்த்து இந்த கிளைமேக்ஸ் காட்சி அந்த அளவுக்கு நன்றாக இல்லை. நம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இதற்கு முந்தைய ரஜினி படங்களின் கிளைமேக்ஸ் காட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அந்த அளவுக்கு திருப்தியாக இல்லை என சொல்லிவிட்டு போய்விட்டாராம்.
ஆனால் சரவணன் சொன்னாரே தவிர முத்துராமனை மிகவும் கடிந்து கொண்டோமோ என வருந்தினாராம். அதற்குள் முத்துராமன் அந்த கிளைமேக்ஸ் காட்சியை முற்றிலுமாக மாற்றி விட்டாராம். அதன் பிறகு சரவணனை அழைத்து மீண்டும் படத்தை பார்க்க அழைத்திருக்கிறார் முத்துராமன். அந்தப் படத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி முற்றிலுமாக மாற்றப்பட்டிருந்ததாம்.
ஒரே நாளில் மாற்றியமைக்கப்பட்ட காட்சி
இது எப்படி சாத்தியம் என சரவணன் யோசிக்க ஒரு ஞாயிறு கிழமையில் பெங்களூரில் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்த ரஜினியை வரவழைத்து மற்ற நடிகர்களையும் ஒன்றிணைத்து அந்த புதிய காட்சியை வடிவமைத்திருந்தாராம் முத்துராமன். இது தெரிந்ததும் ஏவிஎம் சரவணன் முத்துராமனை மனதார பாராட்டினாராம்.
இதையும் படிங்க : எந்த வயசுல நடந்தா என்ன? ‘லால் சலாம்’ படத்தில் தலைவரோடு டூயட் பாடப் போகும் அந்த நடிகை!
ஆனால் பாராட்டியது ஒரு பக்கம் இருந்தாலும் சிறிது நாட்கள் கழித்து முத்துராமனிடம் தனது வருத்தத்தையும் கூறினாராம். அதாவது நான் பிடிக்கவில்லை என்று சொன்னதும் உடனே நீங்கள் காட்சியை மாற்றி விட்டீர்கள். இதையே வழக்கமாக பழக்கப்படுத்திக் கொண்டதால் மற்ற இயக்குனர்களிடமும் இதை நாங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது. ஆனால் அது சில சமயங்களில் நடக்காமல் போய்விடுகின்றது. அவர்கள் முடியாது என்று சொல்லும் போது அந்த நேரத்தில் எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது என்று சரவணன் கூறினாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.