அந்த சீன்ல நான் நடிக்க முடியாது சார்!.. லியோவில் கெளதம் மேனன் நடிக்க மறுத்த காட்சி.. என்ன தெரியுமா?

vijay gautham menon
தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

vijay
அதற்கு பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். முன்பை விடவும் தற்சமயம் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் விஜய். எனவே தொடர்ந்து பழைய மாதிரி வருடத்திற்கு இரண்டு படஙக்ள் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கெளதம் மேனன் மறுத்த காட்சி:
லியோ திரைப்படத்தில் கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிக்கான் இன்னும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும்போது கெளதம் மேனனுக்கு வந்த சிக்கல் குறித்து தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
படத்தில் கெளதம் மேனனுக்கு சிகரெட் அடிப்பது போன்ற காட்சி ஒன்று இருந்ததாம். ஆனால் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம் கெளதம் மேனன். என்ன என்று விசாரித்த போதுதான் கெளதம் மேனனுக்கு சிகரெட் அடிக்க தெரியாது என்கிற விஷயம் லோகேஷ்க்கு தெரிந்துள்ளது.
அதன் பிறகு அவரை அழைத்து எப்படி சிகரெட் பிடிக்க வேண்டும் என்று கத்துக்கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிகழ்வை அவர் பேட்டியில் கூறியிருந்தார்.