தங்கவேல் தலையில் இருக்கும் தொப்பியின் ரகசியம் இதுதான்!. இவ்வளவு நடந்திருக்கா?!...

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சினிமாவில் நடித்து வந்தவர் நடிகர் தங்கவேலு. எம்.ஜி.ஆரை போலவே சிறுவயது முதல் மேடை நாடகங்களில் நடித்து பின்னர் எம்.ஜி.ஆருடன் சினிமாவுக்கு வந்தவர். எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நுழைந்த போதே தங்கவேலுவும் அவருடன் காமெடியனாக நுழைந்தார். எம்.ஜி.ஆரை ராமச்சந்திரா என உரிமையுடன் அழைக்கும் சி்லர்களில் தங்கவேலுவும் ஒருவர்.

thangavelu

எம்.ஜி.ஆருடன் மட்டுமல்ல. சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். . நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி இவர்தான். நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே இவர் ஹீரோவாக நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்தார். இவரின் மன்னார் அண்ட் கம்பெனி காமெடி பல வருடங்கள் கழித்தும் இப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: யார் சிறந்த நடிகர்!. சிண்டு மூட்டிவிட்ட பத்திரிக்கை!. எம்.ஜி.ஆரும் – சிவாஜியும் என்ன பண்ணாங்க தெரியுமா?!..

தங்கவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தீபாவளி நாளன்று இஸ்லாமியர் போல் லுங்கி அணிந்து கொண்டு தலையில் குல்லாவும் வைத்து கொள்வார். அவர் ஏன் அப்படி செய்கிறார்? என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக ஒருமுறை அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

thangavelu

அதில் ‘நான் நாடகத்தில் நடித்துகொண்டிருந்த போது வறுமையில் வாடினேன். நான் மட்டும்மல்ல. எங்கள் நாடக குழுவில் இருந்த பலரும் வறுமையில் வாடிய காலம் அது. ஒருநாள் தீபாவளியன்று எங்களின் நாடக கொட்டகைக்கு அருகே வசித்து வந்த ஒரு இஸ்லாமியர் ஒருவர் எங்களிடம் வந்து ‘ஏன் தீபாவளி கொண்டாட வில்லையா?.. புது உடை அணியவில்லையா?’ என கேட்டார்.

அவரிடம் ‘நாடகத்தில் சரியான வருமானம் இல்லை. எனவே, துணி வாங்க எங்களிடம் பணம் இல்லை’ என சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ! வேகமாக சென்ற அவர் எங்கள் எல்லோருக்கும் ஒரு புது லுங்கியை கொண்டுவந்து கொடுத்தார். அவரின் நினைவாகவே ஒவ்வொரு தீபாவளிக்கும் லுங்கி மட்டும் அணிந்து தலையில் இஸ்லாமியர் அணியும் குல்லாவை வைத்துக்கொள்கிறேன்’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: உனக்கு எதுக்கு இந்த வேலை!.. வேற எதாவது ட்ரை பண்ணு!.. கருணாநிதி மகனை எச்சரித்த எம்.ஜி.ஆர்!..

 

Related Articles

Next Story