பொண்டாட்டி பக்கத்துல படுக்கமாட்டேனு சொல்லிட்டா! நிருபர் கேட்ட கேள்வி.. தக் லைஃப் பதிலடி கொடுத்த இசைப்புயல்

இளையராஜாவின் பயோபிக் ஒரு பக்கம் தயாராக போகிறது என்றால் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையையும் படமாக்க முடியும். அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்து தான் வந்திருக்கிறார். சிறு வயதிலேயே அவருடைய வீட்டு பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர் தான் ஏ ஆர் ரகுமான். முதன்முதலில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்தவர். அவருடைய இயற்பெயர் திலீப் குமார். சினிமாக்காக […]

By :  Rohini
Update: 2024-07-18 01:19 GMT

ar

இளையராஜாவின் பயோபிக் ஒரு பக்கம் தயாராக போகிறது என்றால் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையையும் படமாக்க முடியும். அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்து தான் வந்திருக்கிறார். சிறு வயதிலேயே அவருடைய வீட்டு பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர் தான் ஏ ஆர் ரகுமான்.

முதன்முதலில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்தவர். அவருடைய இயற்பெயர் திலீப் குமார். சினிமாக்காக ஏ ஆர் ரகுமான் என தன் பெயரை மாற்றிக் கொண்டார். இசைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய சினிமா துறைக்கு பெரும் புகழை தேடி தந்தார். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

தன்னுடைய முதல் படத்திலிருந்து முத்திரையை பதித்தார் ஏ ஆர் ரகுமான். அதிலிருந்து யார் இந்த இளைஞன் என ஒட்டுமொத்த சினிமாவும் இவரைப் பற்றி அறிய ஆரம்பித்தது. மின்சார கண்ணா திரைப்படத்திற்கும் லகான் திரைப்படத்திற்கும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ ஆர் ரகுமானின் கெரியரில் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்த பாடலாக அமைந்தது வந்தே மாதரம் பாடல்.

உணர்ச்சி பொங்க இவர் குரலில் பாடிய அந்தப் பாடல் இன்றுவரை ஒவ்வொரு வருட சுதந்திர தின விழாவின் போதும் அனைத்து நிறுவனங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் நிருபர் ஒருவர் அவருடைய ஹேர் ஸ்டைல் பற்றி ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதாவது வந்தே மாதரம் பாடலின் போது வெள்ளை நிற ஆடை அணிந்து அவருடைய ஹேர் ஸ்டைல் கொஞ்சம் நீளமாக இருக்கும். அதிலிருந்து அவருடைய ஹேர் ஸ்டைல் மிகவும் டிரெண்டாகி வந்தது. அதை பின்பற்றி மற்ற இளைஞர்களும் அதே ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்தார்கள்.

ar1

ஏன் அதை மேலும் நீங்கள் தொடரவில்லை என்ற ஒரு கேள்வியை நிரூபர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஏ ஆர் ரகுமான் இப்படியே இருந்தால் என் பக்கத்தில் படுக்கக் கூடாது என என் பொண்டாட்டி சொல்லிவிட்டாள் என திடீரென ஒரு பதிலை கூறி நிருபருக்கு ஷாக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் எங்களுக்கு தான் அந்த மாதிரி நீளமாக வளர வேண்டும் என்று சொன்னதாகவும் பொறாமையில் என் பொண்டாட்டி அந்த மாதிரி சொல்லிவிட்டால் இன்றும் ஜாலியாக பதில் அளித்தார் ஏ ஆர் ரகுமான்.

Tags:    

Similar News