நடிப்பு அரக்கன்!.. இதனால தான் என்னால அப்படி நடிக்க முடியுது!.. சிவாஜி பகிர்ந்த உண்மை!..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கே இலக்கணமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்புதான் இவர் மூச்சு பேச்சு என எல்லாமுமாக இருந்து கடைசி வரை நடிப்பு நடிப்பு என தன் உயிரையே துறந்தவர். பராசக்தியில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் படையப்பா வரை இருந்தது.
முன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சியிருந்தார் நடிகர் திலகம். பாரதியார் , கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என விடுதலை வேட்கை நிறைந்த தலைவர்களை நேரில் பார்க்க இயலாதவர்களுக்கு ஒரு கற்பனை கதாபாத்திரமாக தன் படங்களின் மூலம் காட்டியவர் தான் சிவாஜி.
அதுமட்டுமில்லாமல் புராண சரித்திர கதாபாத்திரங்களான கர்ணன், வீரஅபிமன்யூ, என அந்த கதைகளையும் விட்டு வைக்கவில்லை. இப்படித்தான் இருந்திருப்பார்களோ என நம்பிக்கையூட்டியவர் சிவாஜி. இப்படி கதையோடு ஒன்றியே தன் கதாபாத்திரத்தை கொண்டு செல்வார். இவரின் இந்த அசாத்திய நடிப்பின் ரகசியத்தை சிவாஜியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சாதாரணமாக வெளியில் சந்திக்கும் மனிதர்களை நான் அசால்ட்டாக நினைத்து பார்க்க மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவர்களை பார்க்கும் போது மிகவும் கூர்ந்து கவனிப்பேன். எல்லாரையும் அப்படித்தான் பார்ப்பேன்.
சிறிது நேரம் பார்த்தாலும் அவர்களின் நியாபகங்கள், நினைவுகள் , தோற்றங்கள், என என் மனதில் அச்சாணி போல் பதிந்து விடும். அது போலத்தான் காஞ்சி பெரியவரை சந்திக்க நேர்ந்தது. அவரின் தோற்றத்தை கூர்ந்து கவனித்த நான் அவர் எப்படி பார்க்கிறார், எப்படி நடக்கிறார் என்று உற்று நோக்கினேன். அது எப்பொழுதும் போல சந்திப்பாகத்தான் இருந்தது.
ஆனால் அதுவே நான் நடித்த அப்பர் கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் அவரின் தாக்கம் தான் என்று சிவாஜி அந்த பேட்டியில் கூறியிருந்தார். என்ன ஒரு மாமனிதன் சிவாஜி!.