இப்படி ஒரு பிரச்சினையா? சாவித்திரி - சரோஜாதேவிக்கு இடையே நடந்தது என்ன?

by Rohini |   ( Updated:2023-06-23 01:07:16  )
saro
X

saro

1060களில் தமிழ் சினிமாவை பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி என மூன்று பேரும் ஆட்சி செய்து கொண்டுவந்தனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கிணங்க சக்க போடு போட்டு கொண்டு வந்தனர். அதிலும் பத்மினி நாட்டியப்பேரொளியாக வலம் வந்தார். சாவித்ரி நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தார்.சரோஜாதேவி அழகில் பேரழகியாக இருந்தார்.

saro1

saro1

இதில் சாவித்திரியும் சரோஜாதேவியும் பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். பொதுவாக இரு நடிகைகள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கும் போது அவர்களுக்குள் எந்த அளவு ஒரு நட்பு உருவாகும் என்பதை கவனிக்க முடியும். ஆனால் சாவித்ரி மற்றும் சரோஜாதேவி விஷயத்தில் நடந்ததே வேற.

இருவருக்குள்ளும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உறவு அவ்வளவு சீராக இருக்காதாம். பார்த்தால் பசிதீரும் படத்தில் கூட அவரவர் வசனங்களை பேசிவிட்டு அவரவர் இடத்தில் போய் உட்கார்ந்து விடுவார்களாம். நெருக்கமாக பேசிக் கொள்ள மாட்டார்களாம்.

saro2

saro2

அதுமட்டுமில்லாமல் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கிய சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரோஜாதேவி அவருடைய அனுபவங்களையும் உடன் நடித்த சக நடிகர்களையும் பற்றி பேசிக் கொண்டிருக்க சாவித்ரியை பற்றி மட்டும் பெருசாக பேசவில்லையாம்.

மேலும் பெற்றதால் பிள்ளையா என்ற படத்தின் 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடிக் கொண்டிருந்தார்களாம். அந்த விழாவிற்கு அறிஞர் அண்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்குவதாக இருந்ததாம். அந்த நேரத்தில் தான் அந்தப் படத்தில் நடித்த சரோஜாதேவிக்கு புதிதாக திருமணம் ஆகியிருந்ததாம். அதனால் அந்த விழாவிற்கு அவரால் வரமுடியாத சூழ்நிலையாம்.

aro3

aro3

ஆகவே படத்தின் கதாசிரியரான ஆருர்தாஸ் சாவித்ரியிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி அண்ணா கலந்து கொள்ளும் விழாவில் ஹீரோயின் வராமல் இருந்தால் நன்றாக இருக்காது, அதனால் சரோஜாதேவிக்கு பதிலாக நீ விருதை வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் முதலில் சாவித்ரி ‘ அவருக்கு பதிலா நான் ஏன் வாங்க வேண்டும்? முடியாது’ என சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஆருர்தாஸுக்கும் சாவித்ரிக்கும் இடையே நல்ல நட்பு இருந்த காரணத்தால் அவர் பேச்சை மீறாமல் விழாவிற்கு வந்தாராம் சாவித்ரி. அங்கு கூடி இருந்தவர்கள் சரோஜாதேவி நடித்திருக்கும் படத்தில் சாவித்ரிக்கு என்ன வேலை என்று ஆச்சரியமாக பார்த்தார்களாம்

இதையும் படிங்க : 18 வயசுல கல்யாணம்! 23 வயசுல விவாகரத்து! எம்.எஸ்.வியின் மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..

Next Story