அஜித்தை போல் வாழ்ந்த சுஜாதா.. அவரின் மரணம் பெரிதாக பேசப்படாததற்கு காரணம் இதுதான்
Actress Sujatha: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுஜாதா தென்னிந்திய நடிகைகளில் முதன்மையானவராக கருதப்பட்டார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழிகளிலும் நடித்து சாதனை படைத்தார. 1977 ஆம் ஆண்டு ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
மலையாளத்தில் போலீஸ் ஸ்டேஷன் என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் மேலும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரின் நடிப்பை பார்த்த கே. பாலசந்தர் 1977 ஆம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தின் வெற்றி மேலும் சுஜாதாவை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க: முடிஞ்சா என்கிட்ட மோதி ஜெயிச்சு பாரு! சூப்பர் ஸ்டாருக்கு சேலஞ்ச் விட்ட பவர் ஸ்டார்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பெரும் சாதனை படைத்தார் சுஜாதா. இவரின் சொந்த வாழ்க்கை மர்மமாகவே இருந்து வந்தது.
அஜித்தை போல சுஜாதாவும் பேட்டிகள் கொடுக்க மாட்டார். பொது இடங்களிலும் சுஜாதாவை பார்க்க முடியாது. இவரை கடைசியாக பொது வெளியில் பார்த்தது என்றால் அது சிவாஜி கணேசனின் இறுதி அஞ்சலி சமயத்தில்தான். அதிலும் நடிகை மனோரமாவின் கையை பிடித்தப்படியே நடந்து வந்தார் சுஜாதா.
இதையும் படிங்க்:ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா போச்சு!.. செகண்ட் ஹாஃப் தான் செதச்சிட்டாங்க!.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!..
அதனால் இவரை பற்றி யாருக்கும் தெரியாது. இந்த ஒரு நிகழ்வுதான் அனைவரும் சுஜாதாவை இறுதியாக பார்த்தது. அதன் பிறகு வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்தப் படம் சுஜாதாவின் கடைசி படமும் கூட. அதன் பின் வேறெந்த படங்களிலும் நடிக்க வில்லை. கடைசியாக அவருக்கு இருத நோய் ஏற்பட்டு மாரடைப்பால் காலாமானார் சுஜாதா.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரின் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் இவரின் மரணம் வெளியில் பெரிதாக பேசப்படவில்லை. ஏனெனில் அந்த சமயம்தான் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருந்தது. பிரச்சாரம், ஆட்சி, தேர்தல் என பல பிரச்சினைகள் ஏற்பட்டதனால் இவருடைய மரணம் ஊடகங்களில் பெரிதாக பேசப்படவில்லை.
இதையும் படிங்க: வரிசையா செஞ்சுரி அடிக்கும் மல்லுவுட்!.. ஆட்டநாயகனாக மாறிய ஆடுஜீவிதம்!.. இத்தனை கோடி வசூலா?