சூட் கேஸ வெயிட்டா காட்ட இயக்குனர் செஞ்ச ட்ரிக்! ‘காதல் கோட்டை’ அனுபவம் குறித்து மனம் திறந்த கமலி

Published on: May 7, 2024
deva
---Advertisement---

Actress Devayani: தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகளை நாம் பார்த்து கண்டு களித்திருப்போம். உருகி உருகி காதலிப்பது, ஒரு தலை காதல் என பல வகைகளில் காதலை பிரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்து இருக்கின்றன. ஆனால் முதன்முறையாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்து கடைசியில் அந்த காதலர்கள் ஒன்று சேரும் ஒரு உணர்ச்சிகரமான கதைக்களத்தில் படத்தை அமைத்து அதன் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் அகத்தியன்.

அந்தப் படம் தான் காதல் கோட்டை. அஜித், தேவயானி ஆகிய இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் காதல் கோட்டை. முதல் படத்திலேயே இந்த ஜோடியை அனைவரும் விரும்ப ஆரம்பித்தனர். படம் ஆரம்பத்திலிருந்து கிளைமேக்ஸ் வரை இருவருமே பார்க்காமல் கடைசி கட்டத்தில் பார்க்கும்போது தங்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை காதலாக வெளிப்படுத்தும் அந்த ஒரு தருணம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க:அஜித் கேட்ட முதல் சம்பளம்!.. அதுவும் எதற்காக தெரியுமா?!.. அப்பவே அவர் அப்படித்தான்!…

படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இன்றளவும் அந்தப் படத்தின் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் தான் நடித்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தேவயானி கூறி இருக்கிறார். படம் முழுக்க கையில் ஒரு சூட்கேஸ், தோளில் ஒரு ஹேண்ட்பேக் என ஆட்டோவில் சுற்றிக்கொண்டுவரும் ஒரு கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருப்பார்.

கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தேவயானியை இப்பொழுது பார்த்தாலும் மக்கள் அவரை கமலி என்று அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் கமலியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் தேவயானி. அந்த சமயத்தில் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் எனக்கு வலிக்க கூடாது என வெறும் சூட்கேசை கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!

ஆனால் நடிக்கும் போது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் அந்த சூட்கேஸில் சில பாக்ஸ்கள் அல்லது சில துணிகள் இவைகளை வைத்து தான் தேவயானிடம் கொடுப்பாராம் .அப்பொழுதுதான் நடிக்கும் போது அந்த பாடி லாங்குவேஜ் தத்ரூபமாக வெளிவரும் என்பதற்காக அந்த சூட்கேஸுக்குள் ஏதாவது சில பொருள்களை அடைத்து கொடுப்பாராம். அப்படிப்பட்ட இயக்குனர் தான் அகத்தியன் என தேவயானி ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.