தனுஷ் சொன்ன அந்த ரகசியம்... ட்ரோல் ஆக சிவகார்த்திகேயனின் பேச்சு தான் காரணமா?

by sankaran v |   ( Updated:2024-08-15 02:08:55  )
தனுஷ் சொன்ன அந்த ரகசியம்... ட்ரோல் ஆக சிவகார்த்திகேயனின் பேச்சு தான் காரணமா?
X

d and sk

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஹீரோயினைக் காதலிப்பதாக பழைய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திறமை இருந்தால் அதற்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர் தான் தனுஷ். அந்த வகையில் அனிருத்தில் ஆரம்பித்து பலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ராயன் படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை எழுதியவர் கூட புதுமுகம் தான். அவர் பெயர் கானா காதர். அந்த வகையில் சிவகார்த்திகேயனையும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்து அழகு சேர்த்தவர் தனுஷ் தான்.

தனது 3 என்ற படத்தில் சிவகார்த்திகேயனை தனது நண்பனாக நடிக்க வைத்தார். அவரது காமெடி படத்தில் ரொம்பவே பேசப்பட்டது. அதன்பிறகு அவரை ஹீரோவாக நடிக்க வைத்து எதிர் நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்தார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.

dsk

dsk

அதன்பிறகு அவருக்கு டர்னிங் பாயிண்ட் தான். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்தார். படம் மாபெரும் வெற்றி பெற டாப் ஹீரோவாகி விட்டார்.

தற்போது கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷை விடவும் கூடுதலாக சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் இயக்குனர் வினோத்ராஜை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

மற்றவர்களைப் போல நான் தான் அறிமுகம் செய்தேன் என்று நடிக்க மாட்டேன். எனக்கும் அப்படித்தான் நடந்தது என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இது ஒரு புறம் இருக்க, டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சிவகார்த்திகேயனுக்கு பூ நடிகையுடன் காதல் என்று சொன்னார். மரியான் படத்தில் சிவகார்த்திகேயனைப் பற்றி அப்பா பெயரையும், மகனின் பெயரையும் வைத்திருக்கும் நடிகரைப் பற்றி பேசிய டயலாக் பூவைக் காதலிக்கும் நடிகையைப் பற்றியது என்று தனுஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் தான் தந்தை பெயர், மகன் பெயரைக் கொண்டவர். என்றாலும் அவர் காதலிக்கும் அந்த நடிகையைப் பற்றிக் கூறவில்லை. ஆனால் நெட்டிசன்களோ நடிகை பார்வதியைக் குறிப்பிடுகின்றனர்.

Next Story