Categories: latest news

அடுத்த பிளான் இங்கதான்!… தீயா வேலை பார்க்கும் தனுஷ்?!… பின்ன கையில இவ்ளோ லிஸ்ட் இருக்கே!…

இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிக பிஸியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தான் இயக்கும் திரைப்படங்களையும் மிக கவனமாக இயக்கி வருகின்றார். 2017 ஆம் ஆண்டு பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் அதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா பட டிஸ்கஷன் இப்படிதான் நடந்திருக்கும்?!… இப்படி கலாய்ச்சா எப்படி ப்ரோ!.. தரமான செய்கை!..

தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். இதை தொடர்ந்து கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது.

இதனால் அடுத்தடுத்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். தன்னுடைய மூன்றாவது படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கு அடுத்ததாக தன்னுடைய 4-வது படமான இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார். இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்குவது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார். நடிகர் தனுஷ் தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருப்பதால் இட்லி கடை திரைப்படத்தை முழு வீச்சில் எடுத்து வருகின்றார். நாளை மதுரையில் இப்படத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Delhi Ganesh: டெல்லி கணேஷ் மறைவால் அவர் வளர்த்த நாயின் நிலைமையை பாருங்க.. வைரலாகும் வீடியோ

விரைவில் இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இணைய  இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் 55 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இப்படத்தை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும், லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago