ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ப்ரீ புக்கிங் செய்து காரை வாங்கிய விஜய்! ஏன்னு தெரியுமா?

Vijay: விஜய் தற்போது விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருப்பதுதான் சோசியல் மீடியாவில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. தன்னிடம் இருந்த எட்டு கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான லெக்சஸ் காரை வாங்கி இருக்கிறார் விஜய். அதுவும் சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகி பிரீ புக்கிங் மூலம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பே பிரீ புக்கிங் செய்து இந்த காரை விஜய் வாங்கி இருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.அது ஏன்? இந்த சொகுசு காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றிய செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : பிக்பாஸ் சீசன் -8ல் களமிறங்கும் காதல் மன்னன்! தாங்குமா வீடு? இதுல பெருமை வேற

இந்த சொகுசு கார் 4 சீட்டர் 7 சீட்டர் இருக்கையுடன் கூடிய வசதியில் அமைந்திருக்கிறதாம். ஆனால் விஜய் வாங்கி இருக்கும் இந்த கார் 4 சீட்டர் வகையில் அமைந்திருக்கிறதாம். பின் இருக்கையில் அமர்ந்து கொண்டே முன்னாடி செய்வதை ஆபரேட் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது. கார் ஓட்டுவதை தவிர்த்து முன்னிருக்கையில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை பின் இருக்கையில் அமர்ந்து கொண்டே செய்யலாம் என்ற அடிப்படையில் சில வசதிகள் இந்த காரில் அமைந்திருக்கிறதாம்.

அது போல கால நிலைக்கு ஏற்றார் போல இந்த காரின் தகவமைப்புகளையும் மாற்றி அமைக்க முடியுமாம். குளிர் காலமாக இருந்தால் உள்ளே மிதவெப்பமாகவும் வெயில் காலமாக இருந்தால் உள்ளே குளிராகவும் அதனுடைய தகவமைப்புகளை மாற்ற முடியும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க :என்னது கோட் படம் துப்பாக்கி மாதிரி இருக்குதா… வச்சக் குறித் தப்பாது…!

காரில் ஒரு மினி குளிர்சாதன பெட்டியே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதில் தண்ணீர் பாட்டில், குளிர்சாதன பொருட்கள் என எல்லாவற்றையும் அதில் வைக்க முடியுமாம். 48 இன்ச் அளவுடைய ஒரு டிவியும் பொருத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹர்த்திக் பாண்டியா இந்த வகையிலான காரைத்தான் வைத்திருக்கிறார்.

vijay1

vijay1

அதுபோல விஜயும் இந்த காரை சமீபத்தில் வாங்கி இருக்கிறார். கூடிய சீக்கிரம் பிரபல அரசியல் புள்ளி ஒருவரும் இந்த காரை வாங்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது யார் என்பது கூடிய சீக்கிரம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த காரை வாங்குவதற்கு முழு காரணம் தனது அரசியல் பிரச்சாரத்திற்காக விஜய் வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க :காசு வேணா கொடுக்குறோம்!.. மறுபடி எடுங்க!.. சூர்யா படத்துக்கு வந்த சோதனை!…

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it