இந்த படத்தை நான் தயாரிக்க முடியாது!.. ரஜினி பட இயக்குனருக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்..
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது முதல் படம்தான் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படம் தரும் வெற்றியை வைத்துதான் ஒரு இயக்குனர் பிரபலமாகிறார். பெரிதாக வெற்றியை தராத படத்தை இயக்கும் இயக்குனர்கள் யாரும் அடுத்த படத்திற்கான வாய்ப்புகளை பெற முடிவதில்லை.
எனவே ஏதாவது ஒரு வகையில் பேசப்படும் திரைப்படமாக எடுக்கும் இயக்குனர்களே பிரபலமாகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக கூட இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையைதான் முதலில் படமாக்க நினைத்தார். அதற்காக ஒரு வருடமாக பல தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏறி இறங்கினார். ஆனால் எங்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
உதவி செய்த தயாரிப்பாளர்:
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சி.வி குமாரின் தொடர்பை கார்த்திக் சுப்புராஜ் பெற்றார். எனவே சி.வி குமாரை நேரில் சந்தித்து தனது படத்தின் கதையை அவரிடம் கொடுத்தார். அதனை படித்த சி.வி.குமார் இந்த திரைப்படம் எப்படியும் நான்கு கோடி பட்ஜெட்க்கு கொண்டு செல்லக்கூடிய கதை.
இதை நீங்கள் உங்களது முதல் படமாக எடுக்க வேண்டாம், முதல் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுங்கள் அப்படி ஒரு வேலை இந்த கதையைதான் நீங்கள் முதல் படமாக எடுக்க போகிறீர்கள் என்றால் இந்த படத்தை என்னால் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு சென்ற கார்த்திக் சுப்புராஜ் பீட்சா திரைப்படத்தின் கதையை எழுதினார். அதை கொண்டு வந்து சி.வி குமாரிடம் அவர் கொடுத்தார் அதனை படித்த சி.வி குமார் இந்த படத்தை எடுக்க ஒரு கோடி தான் செலவாகும். எனவே இதை நான் கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்று கூறினார். இப்படித்தான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் கார்த்திக் சுப்புராஜ். இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.