கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கியது அவருக்கே தெரியாதாம்… இது என்ன புது மேட்டரா இருக்கு!!

Published on: February 14, 2023
KB Sundarambal
---Advertisement---

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே.பி.சுந்தராம்பாள், தனது சிறு வயதிலேயே நன்றாக பாடக்கூடிய திறன் பெற்றவர். ஆனால் வறுமையின் காரணமாக ரயில்களில் பாடி காசு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார் சுந்தராம்பாள்.

அதன் பின் நாடகங்களில் பாடக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் உச்சத்தில் இருந்து சுதந்திர போராட்டத்திலும் கலந்துகொண்டார் சுந்தராம்பாள். அதே போல் அக்காலகட்டத்தில் மிகப்புகழ் பெற்ற கர்னாடக பாடகரான எஸ்.ஜி.கிட்டப்பாவை மணம் புரிந்துகொண்டார்.

KB Sundarambal
KB Sundarambal

அதன்பின் “நந்தனார்” என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் “மணிமேகலை”, “அவ்வையார்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் சுந்தராம்பாள்.

கே.பி.சுந்தராம்பாள் அக்காலகட்டத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் அவருக்கு எப்படி ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்தான ஒரு புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது அப்போதைய காங்கிரஸ் தலைவரான சத்யமூர்த்தியும், தயாரிப்பாளர் அசன்தாஸும் “நந்தனார்” திரைப்படத்திற்காக கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். ஆனால் அப்போது கே.பி.சுந்தராம்பாள் வீட்டிலேயே இல்லையாம்.

KB Sundarambal
KB Sundarambal

அந்த காலகட்டத்தில் தேச பக்தராகவும், பிரபல பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்த ஜி.ஏ.நடேசனுடைய மகளுக்கு பிரசவ காலம் என்பதால் அவருக்கு உதவி செய்ய போய்விட்டாராம் சுந்தராம்பாள். ஆதலால் சுந்தராம்பாளின் வீட்டில் அவரது மாமாதான் இருந்திருக்கிறார்.

அப்போது அவரது மாமாவிடம் தயாரிப்பாளர் அசன்தாஸும், சத்தியமூர்த்தியும் “நந்தனார்” திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைப்பதற்கான அனுமதியை கேட்டிருக்கின்றனர். அப்போதுதான் அவரது மாமா, கே.பி.சுந்தராம்பாள் நடிப்பதற்கு ஒரு லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார்.

அசன்தாஸ் ஒரு லட்சம் சம்பளத்திற்கு ஒப்புக்கொள்ளமாட்டார் என்றுதான் சுந்தராம்பாளின் மாமா முதலில் நினைத்தாராம். ஆனால் அசன்தாஸ் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சரி என்று ஒப்புக்கொண்டு, முன் பணமாக ரூ.25,000க்கான காசோலையையும் தந்துள்ளார்.

KB Sundarambal
KB Sundarambal

சுந்தராம்பாள் வீட்டிற்கு திரும்பியபோதுதான் தனது மாமா நந்தனார் திரைப்படத்திற்கு ஒரு லட்ச ருபாய் சம்பளம் பேசியதும் அதற்கு 25,000 முன் பணம் வாங்கியதும் தெரிய வந்ததாம். ஆதலால் வேறு வழி இல்லாமல் சுந்தராம்பாள் “நந்தனார்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இவ்வளவு நாள் சுந்தராம்பாள்தான் அசன்தாஸிடம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் சுந்தராம்பாள் அந்த தொகையை கேட்கவில்லை என்பதும் அவருக்கு இது குறித்த விஷயமே தெரியாது என்ற செய்தியும் இப்போது வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: ரேவதியின் வீழ்ச்சிக்கு இந்த முக்கிய சம்பவம்தான் காரணம்…! கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்…

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.