மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்காதவர்களே கிடையாது. காலத்துக்கும் அழியாத காவிய பாடல்களை கொடுத்தவர்கள். என்னதான் பல படங்களில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் ஆரம்ப காலம் சற்று கடினமாகவே இருந்தது. அக்காலக் கட்டத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி பட இசையமைப்பாளர்கள்தான் தமிழ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இவையெல்லாம் மக்களுக்கு சலித்து போயிற்று. தமிழ் மண் சார்ந்து ஒலிக்கக் கூடிய பாடல்களை மக்கள் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தனர். இதனால் அடுத்தடுத்து புதுப்புது இசையமைப்பாளர்கள் வர தொடங்கினர். என்னதான் புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் இசையமைக்கும் பணி கர்நாடக இசையோடு வர தொடங்கியது. அவையெல்லாம் அந்த காலக்கட்டத்தில் நாடகங்களில் ஒலிக்க கூடிய பாடல்கள் போல் இருந்ததால் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை.
தமிழ்நாட்டு பாணியில் நல்ல தமிழ் பாடல்களை கேட்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை பூர்த்தி செய்யும் விதமாக வந்தவர் தான் சி.ஆர்.சுப்புராமன். அவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அங்கிருந்துதான் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைக்கான இசை ஜாம்பவான்கள் உருவானார்கள். சுப்புராமனிடம் ஆர்மோனியம் வாசிப்பவராக விஸ்வநாதனும் வயலின் வாசிப்பாளராக டி.கே.ராமமூர்த்தியும் இருந்தனர். திடீரென்று எதிர்பாக்காத விதமாக சுப்புராமன் உடல்நிலை குறைவால் இறந்து விடுகிறார்.
இதனால் அவர் இசையமைக்க வேண்டிய படங்கள் எதுவும் முழுமையாக நிறைவு பெறாமல் கிடப்பில் கிடந்தது. உடனே விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் எங்கள் குரு இறந்து போனால் என்ன நாங்கள் அந்த படத்தை முடித்து கொடுக்கிறோம். என்று அந்த படங்களுக்கு எல்லாம் இசையமைத்து கொடுக்கின்றனர். படம் எல்லாம் வெற்றியடைகிறது. இதனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர்களின் இசை திறமையை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணனும் மலையாள தயாரிப்பாளரான ஈச்சப்பனும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார்கள்.
அதுவரை ராமமூர்த்தி-விஸ்வநாதன் என்று இருந்தது. அதற்கு என்.எஸ்.கே, ராமமூர்த்தியிடம் நீங்கள் வயதில் மூத்தவர் விஸ்வநாதன் இளையவர் இளையவர் தப்பு செய்தால் நீங்கள் தான் திருத்த வேண்டும். அதனால் உங்கள் பெயரை விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று மாத்துகிறேன். இப்படி இருந்தால் மற்றவர்கள் உங்களை அழைப்பதற்கும் நன்றாக இருக்கும் என்று என்.எஸ்.கே பெயரை மாற்றி வைத்தார். தயாரிப்பாளர் ஈச்சப்பன் எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேடிக்கொண்டே இருந்த சமயத்தில் இவர்களை நம் படத்திலேயே அறிமுகப்படுத்தலாம். என திட்டம் போடுகிறார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம் அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் ஜுபிடர் பிலிப்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்த பையனாகதான் தெரியும். அதன் பிறகு அவருடைய இசை ஆர்வத்தால் இசை அமைப்பாளர் ஆனது அவருக்கு தெரியாது. தயாரிப்பாளரின் ஈச்சப்பன் எம்.ஜி.ஆர் இடம் இந்த விஷயத்தை சொன்னவுடன்
எம்.ஜி.ஆர்,”என்னங்க ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர்கள் எல்லாம் இசையமைப்பாளராக போட்டு என்படத்த கெடுத்து விடாதீங்க” என்று சொல்லிவிட்டார். அதற்கு ஈச்சப்பன் அப்படி எல்லாம் சொல்லி விடாதீங்க அவர்கள் போட்ட பாடலை கேளுங்க என்று ஒரு சில பாடல்களை போட்டுக் காண்பித்திருக்கிறார். அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனே அவரும் படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்து விட்டார். அன்றிலிருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் எம்.ஜி.ஆர் கூட்டணி சுமார் 25 வருடங்களாக தொடர்ந்தது.
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…