தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. அதனை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் சிம்பு நடித்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னால் வந்த வெந்து திணிந்தது காடு திரைப்படமும் வரவேற்பை பெற்ற படமாகவே இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. ஆனால் இந்த படத்தில் சிம்பு கமிட்டாவதற்கு முன்னால் ஒரு பெரும் கதை நடந்துள்ளது என கூறுகிறார் பிரபல தயாரிப்பாளர் ராஜன்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமாரு என்கிற திரைப்படத்தில்தான் சிம்பு நடிக்க இருந்தார். அந்த படத்திற்காக ஏற்கனவே 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் வேண்டாம் இதைவிட அதிக பட்ஜெட் கொண்ட படத்தில் நடிக்கலாம் என சிம்பு தயாரிப்பாளிடம் கூறியுள்ளார்.
சிம்பு செய்த ட்ரிக்:
பத்து தல திரைப்படம் ஒரு பெரும் பட்ஜெட் படமாக அமைந்தது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனை தொடர்ந்து அடுத்து எந்த படத்தில் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு கதை வைத்துள்ளார், அது நன்றாக உள்ளது, எனவே அதில் நடிக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினார். ஆனால் அந்த கதையின் உரிமையை கலைபுலி எஸ் தாணு வாங்கியிருந்தார். அவர் அந்த படத்தில் சிம்பு நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த கதையை நான் கமலுக்காக வைத்துள்ளேன் என்று அவர் கூறிவிட்டார் எனவே நேரடியாக கமலிடம் சென்ற சிம்பு அந்த கதையை வாங்கி என்னை வைத்து படம் எடுக்க முடியுமா? என்று கமலிடமே கேட்டுள்ளார். தமிழில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிடைத்த பணத்தை வைத்து புது படங்களை எடுக்கும் ஐடியாவில் இருந்ததால் கமலும் அதற்கு ஒப்புக்கொண்டார். இப்படியாகத்தான் தற்சமயம் சிம்பு நடிக்கும் படம் உருவானது என பேட்டியில் கூறியுள்ளார் ராஜன்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…