இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்..-இதுனாலதான் தளபதி தினேஷ்னு பேர் வந்துச்சாம்..!
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகர்களும் நட்சத்திரங்களின் அடையாளமாக அவர்களது பெயர்கள்தான் இருக்கிறது. ஒரே பெயரில் பல நட்சத்திரங்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்களது பெயரை தனித்துவமாக்கி கொள்வதுண்டு.
உதாரணமாக நிழல்கள் படத்தில் நடித்ததால் அந்த நடிகர் தனது பெயரை நிழல்கள் ரவி என வைத்துக்கொண்டார். ஜெயம் ரவியும் அதே போலதான் தனது பெயரை வைத்துக்கொண்டார். ஒரே பெயரில் பல நடிகர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக தங்களது முதல் படத்தை பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்கிறார்கள்.
தளபதி படத்தில் நடித்த ஃபைட் மாஸ்டர் தினேஷ் தனது பெயரை தளபதி தினேஷ் என மாற்றிக்கொண்டாலும் அவரது முதல் படம் தளபதி கிடையாது. அதற்கு முன்பே அவர் சினிமாவில் அறிமுகமாகி விட்டார். தளபதி படத்தில் முதல் காட்சிக்கு வாட்ட சாட்டமான ஒரு ஆளை ரஜினி அடிப்பது போல காட்சி இருந்தது. அதற்கு நடிக்க நல்ல ஆள் வேண்டும் என தேடி கொண்டிருந்தார் மணிரத்னம்.
ரஜினி வைத்த பெயர்:
அப்போது ரஜினிதான் தினேஷ் என்றொரு நபர் உள்ளார். அவர் சரியாக இருப்பார் என தினேஷை பரிந்துரைத்துள்ளார். அதற்கு பிறகு வெகு நாட்களுக்கு பிறகு எஜமான் திரைப்படத்தில் ரஜினியோடு பணிப்புரிந்தார் தளபதி தினேஷ். அப்போது எதேர்ச்சையாக ரஜினி தளபதி தினேஷை சந்தித்தார்.
என்ன தளபதி எப்படி இருக்கீங்க? என ரஜினி கேட்டுள்ளார். இன்னும் நம்மை மறக்காமல் இருக்கிறாரே என பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார் தினேஷ். பிறகு ரஜினியை பார்த்து “சார் நீங்கதான் சார் அந்த படத்துல தளபதி, என்ன போய் தளபதின்னு சொல்றிங்க” எனக் கேட்டுள்ளார். அதற்கு ரஜினி “படத்துல உங்களை கொண்ணுட்டுதான நான் தளபதி ஆகுறேன். இல்லைனா நீங்கதான தளபதி” என கூறியுள்ளார்.
அதற்கு பிறகுதான் தனது பெயருக்கு முன்னால் தளபதி என்கிற பெயரை சேர்த்துள்ளார் தினேஷ். உண்மையில் அது அவருக்கு ரஜினி வைத்த செல்லப்பெயராகும். அதனால்தான் தளபதி முதல் படமாக இல்லாதபோதும் கூட தினேஷ் அதை அவர் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.