ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..

by ராம் சுதன் |
rajini vijayakanth fe
X

rajini vijayakanth fe

இந்திய சினிமாவின் தலைசிறந்த அடையாளங்களுள் ஒருவர் ரஜினி. 70 வயதை தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்வது மட்டுமின்றி என்றும் இளம் கதாநாயகர்களுக்கு போட்டியாளராக விளங்குகிறார். எண்பதுகளில் தொடங்கி இன்று வரையும் இவரது திரைப்பயணம் மேலோங்கி சென்று கொண்டே இருக்கிறது. அப்படி இவரின் திரை பயணம் மேலோங்கி சென்று கொண்டிருக்கும் பொழுது இவருக்கு இணையான நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தவர் விஜயகாந்த்.

அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமல் என இருபெரும் துருவங்கள் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களது படங்களையே ஓரங்கட்டி பல வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் விஜயகாந்த். இந்நிலையில் அன்று ரஜினிகாந்த் செய்த ஒரு செயலே விஜயகாந்தை நடிகராக மாற்றியது. சினிமா ஆசை வருவதற்கும் முக்கிய காரணமாக அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் ரஜினி தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்து சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருந்த சமயம்.

ஒரு நாள் ரஜினியின் படப்பிடிப்பிற்காக மதுரை வந்துள்ளார். அதற்காக விடுதி ஒன்றில் தங்கி நாள் கணக்கில் படப்பிடிப்பு நடித்து வந்தார். ரஜினிக்கு இரவு நேரத்தில் மதுஅருந்து பழக்கம் உள்ளது. அன்று ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தார் ரஜினிகாந்த். அப்பொழுது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் விடுதி முன்பு குவிந்தனர். ரஜினி வெளியே வந்தவுடன் ரசிகர்கள் அவரின் ஆட்டோகிராப் கேட்டு தொந்தரவு செய்தனர்.

அப்பொழுது மது போதையில் இருந்த ரஜினிகாந்த் கோபப்பட்டு ரசிகர்களை தாறுமாறாக அடித்துள்ளார். இவ்வாறு அடித்த விஷயம் மதுரை முழுவதும் பரவி பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இப்ப பிரச்சனையை சரி செய்ய இப்படத்தின் தயாரிப்பாளரான எம்.கே.காஜா சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அங்கு விஜயகாந்த் வீட்டின் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். ஒரு முறை விஜயகாந்த் அவரின் வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். எதேச்சையாக எம்.கே.காஜா விடுதியில் மாடியில் இருந்து பார்த்துள்ளார்.

அப்பொழுது விஜயகாந்த் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு ரஜினி போல் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மேலே அழைத்துள்ளார். மேலே வந்த விஜயகாந்திடம் பெயரை கேட்டார். அவர் விஜயராஜ் என்று சொன்னதும் உன்னை மட்டும் முன்னதாகவே பார்த்திருந்தால் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பேன் விஜயகாந்தாக மாற்றி இருப்பேன். உனக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஏற்ற முகபாவம் உள்ளது.

அதனால் சினிமா மீது உனக்கு ஆசை இருந்தால் அதற்கான முயற்சி இப்போது எடு என்று சொல்லி இருக்கிறார். அந்த பிரச்சனை நடந்தப்ப ரஜினியை பாத்துக்குற வேலையும் ராஜாக்கண்னு விஜயகாந்துகிட்ட கொடுத்தார். அப்ப ரஜினியும் விஜய்காந்துகிட்ட நீங்க சினிமாவுல நடிக்கலாம் என சொன்னார்.

அதிலிருந்து விஜயகாந்திற்க்கு சினிமாவில் நடிக்க ஆசை அதிகரித்தது. பின்னர் அவர் அப்பாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரோ சினிமா எல்லாம் நமக்கு வேண்டாம் என்று சொல்லி நிராகரித்துள்ளார். பின்னர் விஜயகாந்தின் அண்ணன் அவர் அப்பாவிடம் எடுத்துச் சொல்லி சிறிது பணம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் விஜயகாந்தும் அவரது நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தரும் சினிமா ஆசையினால் சென்னைக்கு கிளம்பி உள்ளனர். இப்படித்தான் விஜயகாந்தின் சினிமா பயணம் தொடங்கி இருக்கிறது.

Next Story