கிரிக்கெட் விளையாடிய பெண்ணை கதாநாயகி ஆக்கிய பாலச்சந்தர்.. யாருன்னு தெரியுமா?

இப்போதைய காலகட்டத்தை விட 1990களில் இயக்குனர்களே அதிகமாக கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினர். உதாரணமாக இயக்குனர் பாரதிராஜா நடிகை ரேவதியும் நடிகர் சுதாகரையும் பாண்டியனையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல இயக்குனர் பாலச்சந்தர், பாலு மகேந்திரா போன்றோர் தமிழ் சினிமாவில் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
முக்கியமாக பாலச்சந்தர் கமல் ரஜினியின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். பாலச்சந்தரை பொறுத்தவரை சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. அது என்னவென்றால் பாலச்சந்தர் ஒரு நடிகரை அல்லது நடிகையை பார்த்தவுடனே அவர்களால் சினிமாவில் நல்ல இடத்திற்கு வர முடியுமா என்று கணித்துவிடுவார் என கூறுவார்கள்.
கிட்டத்தட்ட ரஜினிகாந்தையுமே அப்படித்தான் பாலச்சந்தர் கூறியதாக ஒரு பேச்சு உண்டு. ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது அவரை நாகேஷிடம் அழைத்துச் சென்று இவன் சினிமாவில் பெரிய ஆளாக வருவான் என்று பாலச்சந்தர் கூறியிருக்கிறார். இதேபோல பார்த்த உடனே ஒரு நடிகையையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார் பாலச்சந்தர்.
நடிகையை தேர்ந்தெடுத்த பாலசந்தர்:
ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மதுபாலா. இவரை அழகன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர். இந்த திரைப்படத்திற்காக பாலசந்தர் கதாநாயகியை தேடி வந்த சமயத்தில் மதுபாலாவின் உறவினர்களுடன் பாலச்சந்தருக்கு பழக்கம் இருந்தது.
அப்போது வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் மதுபாலா. அந்த சமயத்தில் பாலச்சந்தர் அவரை பார்க்க வேண்டும் என அழைத்திருந்தார். ஆனால் அவர் ஒரு பெரும் இயக்குனர் என்பது மதுபாலாவுக்கு தெரியாது. எனவே அவர் எந்த மேக்கப்பும் செய்யாமல் உடல் வியர்க்க வியர்க்க பாலச்சந்தரை பார்க்க சென்றுள்ளார்.
அவரை அந்த நிலையில் பார்த்தாலும் கூட பாலச்சந்தருக்கு அவர் அழகாகவே தெரிந்தார். மேலும் அவர் ஒரு நல்ல கதாநாயகியாக வருவார் என்று பாலச்சந்தர் நினைத்தார். உடனே அவரிடம் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும். வந்து நடித்துக்கொடு என்று கூறிவிட்டார். பாலச்சந்தர் நினைத்தது போலவே பிறகு மதுபாலா தமிழ் சினிமாவின் பெரும் கதாநாயகியாக ஆனார்.
இதையும் படிங்க: அறிமுகம் செய்த இயக்குனரிடம் நன்றி மறந்த ராஷ்மிகா.. காதல் விவகாரம்தான் காரணமா?