தமிழ் சினிமாவில் புது முகங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் பாரதிராஜாவும் பாலச்சந்தரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்திய நடிகர்கள் மட்டும் மற்றும் நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனர்.
பொதுவாக பாலச்சந்தர் குறித்து கூறும் பொழுதே எந்த ஒரு நடிகரையும் பார்த்தவுடனே அவர் நன்றாக நடிக்க கூடியவரா? இல்லையா? என்பதை அவர் கணித்து விடுவார் என கூறுவார்கள். ரஜினிகாந்தை முதன் முதலில் பாலச்சந்தர் பார்த்த பொழுதே அவர் சிறப்பாக வருவார் என்பதை கண்டுபிடித்து விட்டார் என்றும் சில தகவல்கள் உண்டு.

இப்படியான நிகழ்வு நடிகர் டெல்லி கணேஷ் உடனும் நடந்துள்ளது, டெல்லி கணேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். அப்பொழுது இயக்குனர் விசுவுடன் டெல்லி கணேசுக்கு பழக்கம் இருந்தது.
பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பு:
இந்த நிலையில் பாலச்சந்தர் ஒரு படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டது. அப்பொழுது விசு, டெல்லி கணேஷ் குறித்து கூறி அவரை நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார்.

உடனே டெல்லி கணேசின் நடிப்பை பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும் என நினைத்த பாலச்சந்த,ர் அவரது நாடக குழுவிற்கு ஃபோன் செய்து நான் வரும் வரை நாடகத்தை நடத்தாதீர்கள் என கூறிவிட்டு நேரடியாக நாடகம் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு டெல்லி கணேசன் நடிப்பை பார்த்துள்ளார் பாலசந்தர். அதன் பிறகு இவர் சிறப்பாக நடிக்கிறார் படத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சினிமாவில் முதன் முதலாக டெல்லி கணேசை அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க:பிரபல நடிகரின் மகனுக்கு வலை விரித்த அனுஷ்கா… வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?!..
