கோலிவுட்டில் சில நட்சத்திரங்கள் காம்போவாக பணிப்புரியும்போது அது மாஸ் ஹிட் கொடுப்பது வழக்கம். உதாரணமாக மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான்,வைரமுத்து மூவரும் ஒரு காம்போ. இவர்கள் காம்போவில் வரும் படங்கள் நல்ல ஹிட் கொடுக்கும்.
அதே போல பாரதி ராஜா,வைரமுத்து, இளையராஜா இவர்கள் மூவரும் ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தனர். வைரமுத்துவிற்கு முன்னாடியே பாரதி ராஜாவும், இளையராஜாவும் சினிமாவிற்கு வந்துவிட்டனர். அதற்கு பிறகு சற்று தாமதமாகதான் வைரமுத்து சினிமாவிற்கு வந்தார்.
பாரதிராஜாதான் வைரமுத்துவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அப்போது நிழல்கள் என்கிற திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தார் பாரதிராஜா. அந்த சமயத்தில் பட வாய்ப்பு தேடி அலைந்துக்கொண்டிருந்த வைரமுத்துவின் திறமையை கண்டு அந்த படத்திற்கு பாட்டு எழுதுவதற்காக அவரை அழைத்து வந்தார்.
வாயை பிளக்க வைத்த வைரமுத்து:
ஆனால் இளையராஜாவிற்கு ஏனோ வைரமுத்துவை பார்த்தவுடன் பிடிக்கவில்லை. இருந்தாலும் பாரதி ராஜாவிற்காக பாட்டை வாசித்து காட்டினார் இளையராஜா. அமைதியாக பாட்டை கேட்டு கொண்டிருந்த வைரமுத்து, பாடல் முடிந்ததும் வேகமாக எழுந்து சென்றுவிட்டார்.
இதனால் கடுப்பான இளையராஜாம் “யாருய்யா இவன்! எதுக்குய்யா இவனையெல்லாம் கூட்டிக்கிட்டு வர்றீங்க” என கோபப்பட துவங்கிவிட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து கையில் பேப்பருடன் வந்தார் வைரமுத்து. அதை இளையராஜாவிடம் கொடுத்தார்.
இது ஒரு பொன்மாலை பொழுது என்கிற பாடலின் வரிகளை எழுதியிருந்தார் வைரமுத்து. அதை படித்தவுடன் வைரமுத்து எப்பேற்பட்ட திறமைசாலி என்பதை இளையராஜா புரிந்துக்கொண்டார். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
இதையும் படிங்க: இந்த விஷயம் பெருசா யாருக்கும் தெரியாது.. இளையராஜா பற்றி வாலி சொன்ன சீக்ரெட்!..
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…