ஜெய்லர் 2 திரைப்படத்திற்கு பிறகு ரஜினி சிபி சக்கரவர்த்தியுடன் இணைய போகிறார். இந்த ஒரு அறிவிப்பு கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே ரஜினிக்கு சிபி சக்கரவர்த்தி ஒரு கதை சொன்ன நிலையில் அந்தக் கதையில் ரஜினிக்கு உடன்பாடு இல்லாததால் சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் முடிவை ரஜினி மாற்றிக் கொண்டார். அதன் பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படத்தை முதலில் பண்ண வேண்டியது சிபி சக்கரவர்த்தி தான். அதன் பிறகு ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியானார் ரஜினிகாந்த்.
இப்போது ஜெயிலர் 2 திரைப்படம் ஓரளவு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி எல்லார் மனதிலும் இருந்தது. சிபி சக்கரவர்த்திக்கு முன்னாடி பல இயக்குனர்கள் இந்த லிஸ்டில் இருந்தனர். முதலில் சுந்தர் சி ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்ற ஒரு அறிவிப்பு வெளியானது. ராஜ் கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர் சி அந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற அந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .திடீரென சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகினார்.
அதன் பிறகு பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டன. ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, நித்திலன் சுவாமிநாதன் என ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக்கொண்டே வந்தது. கடைசியாக சிபி சக்கரவர்த்தி தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்று சமீபத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. ரஜினியை பொறுத்த வரைக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு தான் நடிக்கும் அடுத்த படம் ஒரு லைட் ஜானரில் பண்ண வேண்டும் என்று தான் ரஜினி நினைக்கிறார். கமர்சியலாகவும் இல்லாமல் ஆக்சன் ஆகவும் இல்லாமல் ஒரு காமெடி கலந்த கதையாக இருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார்.

அதனால் தான் சுந்தர் சி யை முதலில் அப்ரோச் செய்தனர். ஆனால் அது நடக்கவில்லை .அடுத்து அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் என இவர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த இயக்குனர்களிடம் ரஜினி சொன்ன ஒரு விஷயம் என்னவெனில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சீனி கம் படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்று ரஜினி மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதை இந்த இயக்குனர்கள் எல்லாரிடமும் ரஜினி கூறியிருக்கிறார்.
அதில் அமிதாப்பச்சன் ஏஜென்ட்டாக நடித்திருப்பார். அதேசமயம் படமும் காமெடியாகவும் இருக்கும். இதிலிருந்து தன்னுடைய வயதுக்கு ஏற்றவாறு தன்னுடைய அடுத்த படம் இருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஒரு வேளை சிபிச் சக்கரவர்த்தி ரஜினி இணையும் அந்தப் படம் சீனி கம் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் அல்லது அதே பேட்டர்னில் அமையும் கதையாக கூட இருக்கலாம். அப்படியும் இல்லை என்றால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து கண்டிப்பாக சீனி கம் படத்தின் ரீமேக்கை ரஜினி கண்டிப்பாக எடுப்பார் என்று இந்த தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
