இப்போதைய காலக்கட்டத்தை விடவும் 1980 மற்றும் 90களில் கதாநாயகிகளுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர். கதாநாயகிக்காக திரைப்படங்களை இளைஞர்கள் பார்க்க செல்லும் நிகழ்வு நடந்தது.
இதனால் அப்போதைய காலக்கட்டத்தில் நடிகை ஸ்ரீ தேவி, குஷ்பு போன்ற பல நடிகைகளுக்கு பெரும் ரசிக பட்டாளங்கள் இருந்து வந்தன. அந்த வரிசையில் நடிகை சிம்ரனுக்கும் கூட பெரும் ரசிக பட்டாளம் இருந்து வந்தது. தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ் மோர், வி.ஐ.பி போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் சிம்ரன்.
வரிசையாக அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து அப்போது பிரபலமான நடிகர்களாக இருந்த விஜய்,அஜித்,பிரசாந்த் என பல நடிகர்களோடும் இவர் கதாநாயகியாக நடித்தார்.
சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கை:
ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சிம்ரன் சின்னத்திரையில் சாதரண வேலையில் இருந்தார். ஹிந்தியில் உள்ள தூர்தர்ஷன் சேனலில் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார் சிம்ரன். அப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
இதனால் அவருக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில்தான் நடித்து வந்தார் சிம்ரன். பிறகு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்ற சிம்ரன், பிறகு தமிழ் சினிமாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: இவ்ளோ அழகா இருந்தா என்ன பண்றது?.. பெண்களை கொள்ளை கொண்ட தமிழ் நடிகர்களின் பட்டியல்!..
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…