Connect with us
surya

Cinema News

அந்தப் படத்தால் ஃபீல் பண்ணி அழுத சூர்யா! எப்படி மீண்டு வந்தார் தெரியுமா? பிரபலம் சொன்ன தகவல்

Actor Surya: ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது சினிமாவை பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாமல் தான் வந்தார் நடிகர் சூர்யா. அதுபோல சிவகுமாருக்கும் தன் மகனை சினிமாவில் நடிக்க வைக்க ஆரம்பத்தில் ஆர்வமே கிடையாது. இருந்தாலும் விதி யாரை விட்டது .நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித் நடிக்க ஏதோ கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலக அதன் பிறகு சூர்யா நடிக்க இருந்தது.

அதுதான் அவருடைய முதல் அறிமுகப்படம். அந்த படத்தில் நடிக்கும் பொழுது சரியாக வசனம் கூட பேச தெரியாது. டான்ஸ் ஆட தெரியாது. நடிக்கவும் தெரியாது.ஏகப்பட்ட காட்சிகளில் இயக்குனரிடம் திட்டு வாங்கிக் கொண்டேதான் நடித்திருந்தார் சூர்யா. இப்போது அவருடைய அந்த மாற்றம் எப்பேர்பட்ட மாற்றம் என அனைவருக்கும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி கமலை வைத்து ஒரு படம் கூட எடுக்கலயே! காரணம் என்ன தெரியுமா? டி. ஆரே சொல்லியிருக்காரு பாருங்க

இந்த நிலையில் அவருடனே பயணித்த போட்டோகிராபர் ஜீவன் சூர்யாவை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் .சந்திப்போமா என்ற திரைப்படத்தில் சூர்யாவை முதன் முதலில் சிபாரிசு செய்தது போட்டோகிராபர் ஜீவன் தானாம். ப்ரீத்தா விஜயகுமார் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமான படமும் கூட.

ஆனால் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் சூர்யா எப்படியாவது இந்த படத்தில் நம் மார்கெட் உயரும் என நினைத்துக் கொண்டுதான் இருப்பாராம். ஆனால் சந்திப்போமா திரைப்படம் தோல்வியை தழுவியதால் மிகவும் மனமுடைந்து பீல் பண்ணி அழுதாராம். அதன் பிறகு தான் நந்தா படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு சூர்யாவுக்கு வந்திருக்கிறது .

இதையும் படிங்க: தூக்கலான கிளாமரில் நடிகைங்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லி!.. சினிமாவுல நடிக்க போறீங்களா?!..

அந்த படத்தில் சிகரெட்டை பிடிக்கும் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக சூரியாசிக்ரெட் பிடிக்க பழகிக் கொண்டிருந்தாராம். சூர்யாவுக்கு சிகரெட்டே பிடிக்கவே தெரியாதாம். இருந்தாலும் உதடு கருப்பாக மாற வேண்டும் என்பதற்காக சிகரட்டை அடிக்கடி பிடித்துக் கொண்டே இருந்தாராம் சூர்யா. அடுத்ததாக காக்க காக்க திரைப்படம்.

அதில் வேறொரு சூர்யாவை நாம் பார்க்க முடிந்தது. இப்படி சூர்யாவின் அடுத்தடுத்த பரிமாணங்களை கூட இருந்து பார்த்தது நான்தான் என போட்டோகிராபர் ஜீவா கூறி இருக்கிறார். ஆனால் இன்று சூர்யா ஒரு தயாரிப்பாளராக அதுவும் பாலிவுட்டில் தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர இருக்கிறார். இன்று இவருக்கு என  ஒரு தனி அந்தஸ்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: ‘கூலி’ படத்திற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம்! என்னப்பா சொல்றீங்க? அதுவும் LCUவா?

google news
Continue Reading

More in Cinema News

To Top