நடிச்சதோ 100.. ஹீரோயினாக 11! நீலாம்பரிக்கே டஃப் கொடுத்த நக்மா.. சுவாரஸ்ய தகவல்

Published on: May 18, 2024
nagma
---Advertisement---

Actress Nagma: பல ஹீரோயின்களை இந்த தமிழ் சினிமா பார்த்து இருக்கிறது. இன்னும் பார்த்து வருகிறது. அதில் 11 படங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து இன்னும் தனது மார்க்கெட்டை குறையாமல் வைத்திருக்கும் நடிகையாக நக்மா இருந்து வருகிறார். ஹிந்தியில் அறிமுகம் ஆகி தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு தமிழில் காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நக்மா.

அதுவும் இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நடிகையாக இருந்தார் நக்மா. அதுவும் அந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு முகபாவனைகளால் ஒவ்வொரு காட்சிகளிலும் அவருடைய அந்த நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினர்.

இதையும் படிங்க:கவுண்டமணி கோபப்பட்டு கத்திட்டாரு!.. நாட்டமை பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!.. பகிரும் ரவிக்குமார்…

மற்ற ஹீரோயின்களைப் போல இல்லாமல் நக்மா நடித்த ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான நடிப்பையே வெளிப்படுத்தி இருப்பார். மேட்டுக்குடி படத்தை எடுத்துக் கொண்டால் கோபமும் காதலும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல் பாட்ஷா படத்தில் எமோஷனல் காட்சிகளில் இந்த அளவுக்கு நடிக்க முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பார்.

பிஸ்தா படத்தை எடுத்துக் கொண்டால் நீலாம்பரிக்கே டப் கொடுக்கும் கதாபாத்திரமாக அந்த படத்தில் நடித்திருப்பார். சொல்லப் போனால் நீலாம்பரிக்கு முன்பே அப்படி ஒரு வில்லத்தனமான கேரக்டரில் நடித்த நடிகையாக நக்மா அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற பல மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்த நக்மா தமிழில் 11 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீ அந்த சாதியா?.. வெட்கமா இல்ல!.. பிரபல இசையமைப்பாளர் கேட்ட கேள்வி… முதல் வாய்ப்பே இப்படித்தானா?..

இவருடைய பிளஸ்சே அவருடைய முகபாவனைகள் தான். அவ்வளவு சீக்கிரமாக தமிழில் ரஜினியுடன் புதுமுக  நடிகைகள் நடித்து விட முடியாது. ஆனால் இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக மாறினார் நக்மா. இப்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் நக்மாவிற்கு என அந்த மார்க்கெட் அப்படியே இருந்து வருகிறது. அவருக்கான ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.  நடனத்திலும் இவர் அத்துப்பிடி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.