‘கோட்’ படத்தின் டிரெய்லரில் காட்டாத முக்கிய பிரபலங்கள்! எங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?

Published on: August 18, 2024
vijay
---Advertisement---

Goat Movie:நேற்று விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்பா மகன் கெட்டப்பில் நடித்திருக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மீனாட்சி சவுத்ரியும் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே அப்பா மகன் கேரக்டரில் பிகில் திரைப்படத்தில் நடித்து பெரிய ஹிட்டை கொடுத்த விஜய் அடுத்ததாக இந்த கோட் திரைப்படத்திலும் அதே போல்  நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மகன் கேரக்டர் மிகவும் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக டிஏஜிங் டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயால் பொங்கினாரா அஜித் இயக்குனர்.. நடந்ததே வேற? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!

படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ட்ரெய்லர் நேற்றுதான் ரிலீஸ் ஆனது. பாடல்கள் எந்த அளவு ஒரு எதிர்மறையான விமர்சனத்தை பெற்றதோ அதற்கு நேர் எதிராக கோட் படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைவரும் கோட் படத்தின் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். விஜயின் பல படங்களின் மேனரிசம் இந்த படத்தில் வெங்கட் பிரபு காட்டி இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதுவும் கில்லி படத்தில் முருகையா பாடல் விஜயால்தான் பிரபலமானது. அதே மாதிரியான ஒரு கெட்டப்பில் கோட் படத்தில் ஒரு காட்சியில் வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோட் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதோ அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் டிரெய்லரில் இல்லை.

இதையும் படிங்க: உலகநாயகனையே ஓவர் டேக் செய்த தனுஷ்… டாப் 10 வசூல் படங்கள்..!

ஆனால் அவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்னும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். அதில் விஜயகாந்த் கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் வருவதாக ஒரு செய்தி வெளியானது. அதைப் பற்றி கேட்கையில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் கோட் படத்தில் வருகிறார் என நாங்கள் சொல்லவில்லை.

அவருடைய துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் தான் கூறினார். அவரே சொல்லும் போது இந்த படத்தில் அவர் வராமல் இருப்பாரா என மறைமுகமாக பதில் அளித்து இருந்தார் வெங்கட் பிரபு. அதேபோல் திரிஷா இந்த படத்தில் ஒரு பாடல் ஆடியிருக்கிறாரே என்று சொன்னார்கள். ஆனால் அவரை டிரெய்லரில் காட்டவில்லையே என கேட்டதற்கு அதற்கு வெங்கட் பிரபு  ‘என்னது திரிஷா இந்த படத்தில் நடிக்கிறாரா’ என ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார் .

இதையும் படிங்க: ஹீரோயினை கட்டிப்பிடிக்க தயங்கிய ரஜினி! மீனாவுக்கு ஒரு நியாயம்.. இந்த நடிகைக்கு ஒரு நியாயமா?

அது மட்டுமல்லாமல் டிரெய்லரில் சிஎஸ்கே அணிக்கே உரிய அந்த மஞ்சள் கலர் பனியனில் விஜய் வருவதும் அதில் டெஃபனட்லி நாட் என தோனிக்கே உரிய வசனம் அதில் எழுதி இருப்பதும் கிளைமாக்ஸ்சில் லயன் இஸ் ஆல்வேஸ் லயன் என சொல்லுவது தோனிக்கே உரிய வசனம் என்பதால் கண்டிப்பாக தோனி இந்த படத்தில் கேமியோ ரோலில் வருவார் என சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.