தமிழ் சினிமாவில் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்ட நடிகர் யார் தெரியுமா?
கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என எல்லா “உட்”களிளும் உள்ள நடிகர் நடிகைகளில் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளும் வழக்கம் மிக சாதாரணமானதுதான். நடிகர் நடிகைகளுக்கு முகம் என்பது மிக முக்கியமானது. முகத்தில் எதாவது காயம் ஏற்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது வழக்கம்தான். ஆனால் பெரும்பாலும் தங்களது அழகை மேம்படுத்திக்காட்டுவதற்காகவே சில நடிகர் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வார்கள்.
பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை பிரியங்கா சோப்ரா, வாணி கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதரி, ஷாருக்கான், சல்மான் கான், சாகித் கபூர் என பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகர்கள் பட்டியல் மிக பெரிது.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஸ்ரீதேவி, சமந்தா, தமன்னா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் என பலரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் இவர்களெல்லாம் சினிமாத்துறையில் வளர்ந்த பிறகுதான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமா உலகில் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்திலேயே ஒரு நடிகர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் சத்யராஜ்தான் அவர்.
இதையும் படிங்க: கங்கை அமரனை எல்லோர் முன்னும் அவமானப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்… அடப்பாவமே!!
இவர் மிகப்பெரிய நடிகராக பிரபலமாவதற்கு முன்பே தனது முகத்தின் தாடை பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாராம். அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட முதல் நடிகர் சத்யராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.