Tamil Actors: சினிமாவை பொறுத்த வரைக்கும் திறமை இருந்தும் அவர்களால் மேற்கொண்டு தங்களுடைய கெரியரில் ஜொலிக்க முடியாத கட்டத்தில் ஒரு சில நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஹரி இயக்கிய சேவல் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் பரத். ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தது.
ஆனால் தொடர்ந்து அவருக்கு நல்ல கதை அம்சத்தோடு படங்கள் வந்ததா என்றால் இல்லை. கதையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டார் பரத் .அடுத்ததாக நடிகர் ஸ்ரீ. இவர் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு ஹோம் சிக்காகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களே இல்லாமல் இருந்த ஸ்ரீ தொடர்ந்து வில்லம்பு, இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: என்னை கேட்டா யூஸ் பண்ணாங்க!.. பாட்டும் அப்படித்தான்!.. மீண்டும் இளையராஜாவை சீண்டும் வைரமுத்து!..
மாநகரம் படத்தில் தான் இவருடைய நடிப்பு பேசப்பட்டது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படமும் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவர் நடித்த இந்த நான்கு படங்களுமே விமர்சன ரீதியாக பேசப்பட்டது. இவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் இவருக்கும் அடுத்தடுத்த படங்கள் வந்ததா என்றால் இல்லை. அடுத்ததாக நடிகர் விதார்த். மைனா படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார் விதார்த்.
அவருடைய இனிஷியல் ஸ்டார்ட் மிகவும் அற்புதமாக இருந்தது .ஆனால் அந்த ஒரு படம் தான். அதன் பிறகு சொல்லும்படியாக விதார்த்துக்கு படங்கள் அமையவில்லை. இருந்தாலும் நடிப்பு பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதை மெருகேற்றி நடிப்பதில் சிறந்தவர் விதார்த். சமீப காலமாகத்தான் ஒரு சில நல்ல கதைகளத்தோடு படங்கள் அவரை தேடி வருகின்றது.
இதையும் படிங்க: மீண்டும் நடுவிரல் சர்ச்சையில் சிக்கிய அஜித்! எப்பவோ வந்த படத்தால் மறுபடியும் மாட்டிக்கினாரே
அடுத்ததாக விமல். கிராமத்து கதை களத்தோடு படங்களில் நடிப்பதில் விமலை விட்டால் வேறு எந்த நடிகரையும் நம்மால் சொல்ல முடியாது. விலங்கு சீரியலுக்கு பிறகு அவர் இப்போது கமர்சியலுடன் கூடிய ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இடையில் படங்கள் இல்லாமல் மிகவும் மார்க்கெட் குறைந்து பின் தங்கிய நிலையில் இருந்தார் விமல்.
ஆனால் இப்போது ஒரு சில படங்கள் அவரை தேடி வருகின்றது. அடுத்ததாக தினேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ் மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர். அவர் தேர்ந்தெடுக்கும் ஸ்கிரிப்ட் மக்களுக்கு பிடிக்கும் வகையில் தான் அமைந்து வருகின்றன. ஆனால் பெரிய பெரிய நடிகர்கள் கமர்சியல் படங்களில் நடித்து வசூல் ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றனர். அதேபோல தினேஷம் இருக்கிறாரா என்றால் இல்லை.
இதையும் படிங்க: என்னம்மா இப்படி இறங்கிட்ட!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் பண்ணும் சீரியல் நடிகை…
கமர்சியல் பக்கம் சாயாமல் கன்டென்ட் ரிலேட்டடான படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் தினேஷ். இருந்தாலும் அவருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. இவரும் மிகவும் திறமைசாலியான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்துக் கொடுப்பதில் வல்லவர். இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் தங்களுடைய திறமையை நம்பி மட்டுமே இன்னும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
