சினிமாவை பொறுத்தவரைக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன என்று இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கிறது. எத்தனையோ திறமைகள் இருந்தும் இன்னும் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் சில நடிகர்கள் திணறி வருகின்றனர்.
வாரிசு படத்திற்காக தில் ராஜு சொன்னது மாதிரி எல்லா திறமைகளும் இருந்தும் ஏன் இன்னும் அவர்களால் ஒரு அந்தஸ்தை பெற முடியவில்லை என்பது தான் கேள்வி. அந்த வகையில் இப்படி எல்லா திறமைகளும் இருந்தும் போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்ட் தான் பார்க்கப் போகிறோம்.
இதையும் படிங்க : பொழைக்க வைச்சதும் அவர்தான்.. சாவுக்கு காரணமாக இருந்தவரும் அவர்தான்.. எம்ஜிஆரை பற்றி பிரபல நடிகர் கண்ணீர் மல்க பேட்டி..
நடிகர் ஜீவா: 2003 ஆம் ஆண்டு முதன் முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ஜீவா. ஆர்.பி,சௌத்ரியின் மகன் என்பதையும் தாண்டி இவருக்குள் பல திறமைகள் இருக்கின்றது. இவர் நடித்து வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் இவரை ஒரு நல்ல நடிகர் என்று அங்கீகரித்தது. குறிப்பாக ராம், கற்றது தமிழ், ரௌத்திரம் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பாராட்டுக்குரியது. எல்லா ஜோனரிலும் கலக்கக் கூடிய நடிகரும் கூட. ஆனாலும் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது கேள்விக் குறியே.
நடிகர் ஆர்யா : 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானார் ஆர்யா. கலகலப்புக்கு பஞ்சமில்லாத நடிகர். ரொமான்ஸில் பிச்சி பிடலெடுக்கும் நடிகரும் கூட, சண்டை , கலாட்டா என அனைத்து துறைகளிலும் சிறப்பாக நடிப்பவர். இவரின் பெரும்பாலான படங்கள் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றி கண்டன. சமீபத்தில் கூட சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி. ஆனால் அதை ஒரே நிமிஷத்தில் கீழே போட்டார் கேப்டன் படத்தின் மூலம். இவருக்குள்ள இடமும் அறியப்படவில்லை.
நடிகர் அதர்வா: 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி மூலம் அறிமுகமானார் அதர்வா. நடிகர் முரளி மகன் என்றாலும் திறமையான நடிகர் அதர்வா. அதை பரதேசி படத்தின் மூலமே நிரூபித்தார். மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் இரண்டாவது நாயகன் என்றாலும் திறம்பட கையாண்டிருப்பார். இவரும் எல்லா ஜோனரிலும் நடிக்க கூடிய நடிகர் . ஆனாலும் எதிர்பார்த்த அந்தஸ்தை எட்ட முடியவில்லை.
இவர்கள் மட்டுமில்லை இன்னும் பல நடிகர்கள் இப்படி இருக்கிறார்கள். இன்றைய சூழலில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு , சூர்யா ஆகியோர் சரியான ரசிகர்கள் பட்டாளத்தோடு இருக்கிறார்கள் என்றால் ஒரு வெற்றி ஒரு தோல்வி என அடுத்தடுத்து படங்களை கொடுத்து ரசிகர்களை கைக்குள்ளேயே வைத்திருப்பவர்கள். மேலும் படத்தின் கதையும் முக்கியம். ஆனால் ஜீவா, ஆர்யா, அதர்வா இவர்கள் தொடர்ந்து பல தோல்வி படங்களையே கொடுத்திருக்கிறார்கள், மேலும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெரிந்தால் இவர்களால் கண்டிப்பாக அந்த அந்தஸ்தை எட்ட முடியும்.