ஊ சொல்றீயா மாமா ஊஊ சொல்றீயா! ஐட்டம் சாங்கில் குஜால் பண்ணிய முன்னனி நடிகைகள்
தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஐட்டம் சாங் என்ற ஒரு விஷயம் இருந்து கொண்டு வருகின்றது. அன்று முதல் இன்று வரை ஐட்டம் சாங்கிற்கு என்று ஒரு சிறப்பு இருக்கின்றது. அந்த ஒரு பாடலுக்காகவே ரசிகர்கள் ஏங்கி தவிப்பதும் உண்டு. அதற்கென்று ஒரு சில நடிகைகள் இருப்பார்கள். குறிப்பாக சில்க், டிஸ்கோ சாந்தி, விசித்ரா போன்ற பல நடிகைகள் இருந்து வந்தனர்.
அதுவே முன்னணி நடிகைகள் ஐட்டம் சாங்கை ஆடினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அந்த வகையில் ஐட்டம் சாங்கிலும் எங்களால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்த நடிகைகளை பற்றிய ஒரு லிஸ்ட்டை இப்போது பார்க்க இருக்கிறோம்.
சிம்ரன் : 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அந்த ஒரு காலகட்டத்தில் கனவு கன்னியாகவும் இருந்து வந்தார். திடீரென அவர் ஆடிய ஒரு பாடல் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. யூத் படத்தில் விஜயுடன் ஆடிய ஆல்தோட்ட பூபதி என்ற பாடல் அனைவரையும் ஆட செய்தது. அந்த நடனத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
மீனா : அஜித், விஜய், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகை மீனா. கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருந்து வந்தவர் மீனா. சரக்கு வச்சிருக்கேன் என்ற பாடல் மூலம் மீனாவால் இப்படியும் நடனம் ஆட முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.
நயன்தாரா : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கென்று ஒரு தனி பெருமையே உண்டு. இவர் இரண்டு மூன்று ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளார். சிவாஜி திரைப்படத்தில் பலேலக்கா என்ற பாடல் விஜய்யுடன் சிவகாசி, தனுஷ் நடித்த எதிர்நீச்சல் போன்ற படங்களில் நயன்தாரா ஆடி மக்கள் மனதை கிரங்கடித்தார்.
தமன்னா : மில்க் பியூட்டி என அழைக்கப்படும் தமன்னா பொதுவாகவே கவர்ச்சியை தாராளமாக காட்டி நடிக்க கூடியவர். அதன் அடிப்படையில் உலகங்களிலும் அதிக வரவேற்பு பெற்ற கே ஜி எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார் தமன்னா. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் இது போன்ற பாடல்களில் ஆடி இருக்கிறார்.
சமந்தா : இதற்கு முன்பு எத்தனையோ நடிகைகள் இந்த மாதிரி பாடலில் ஆடி இருந்தாலும் சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது. முன்னணி நடிகையாக இருந்த சமந்தா இந்த பாடலில் ஒரு ஐட்டம் பெண்ணாகவே மாறி இருப்பார். அது அவர் காட்டிய நளினம் நடனம் போன்றவற்றில் தெளிவாக காணப்படும். இந்தப் பாடல் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க : இசையமைப்பாளர் எல்லாம் பாடுனா எப்படி வெளங்கும்!.. அனிரூத்தை தாக்கி பேசிய பிரபல பாடகர்…