Cinema News
வயசு போச்சுனா என்ன ? தெம்பு இருக்குல! 40 வயசுல திருமணமாகி அஜால் குஜால் செய்த நடிகைகள்
திருமணம் என்பது இருவர் மனங்களை இணைக்கும் பாலமாகும். தெரியாத இருவர் இந்த திருமண பந்தத்தில் இணையும் போது எதிர்பாராத சம்பவங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும். அதையெல்லாம் பக்குவமாக ஏற்க தன் மனதை இருவருமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரம் காதலித்து திருமணம் செய்யும் நபர்கள் கல்யாணம் என்ற இந்த விஷயத்திற்குள் வரும் போது ஒரு சில ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்யவேண்டி வரும். அப்படி முடியாத பட்சத்தில் தான் பிரச்சினைகள் அங்கு இருந்து ஆரம்பமாகின்றது.
இப்படி தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கு இடையே ஒன்று இல்லை இரண்டு மூன்று திருமணங்கள் வரை நடந்திருக்கின்றன. ஒரு சில பேருக்கு தன் மூன்றாவது திருமணத்தில் தான் தான் நினைத்த வாழ்க்கை அமைந்திருக்கும். அதுவும் அவர்களின் 40 வயது காலத்தில். அப்படி 40 வயதை கடந்த நடிகைகளின் திருமணத்தைத் தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.
அம்பிகா : 80கள் காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை அம்பிகா. சகோதரிகளாக அம்பிகாவும் ராதாவும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே தன் கைக்குள் வைத்து அடக்கி ஆண்டனர். ரஜினி, கமல் என மாறி மாறி போட்டிப் போட்டு நடித்துக் கொண்டிருந்தனர். இப்போது அம்பிகா சீரியல்களில் நடித்து குடும்ப ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார். இவருக்கு முதலில் பிரேம் என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து 3 வருடங்களுக்குள் அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். ஆனால் முதல் கணவனுக்கு பிறந்த இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அம்பிகா இப்போது தான் சென்னைக்கு வந்தாராம். ரவிக்காந்தை திருமணம் செய்யும் போது அவருக்கு 40 வயதை கடந்து விட்டதாம்.
ராதிகா : இவரும் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை அடைந்த நடிகை. குறிப்பாக நடிப்பு இளவரசி என்றே சொல்லலாம். இவர் நடிகர் பிரதாப் போத்தனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுவும் இருவரும் முதலிலேயே பிடித்தால் திருமணம் செய்து கொள்வோம், இல்லை பிரிந்து விடுவோம் என்று நினைத்தே லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்களாம். ஆனால் ஒரு வருடத்திலேயே பிரிய லண்டன் மாப்பிளை ஒருவரை திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ரேயான். ஆனாலும் அந்த வாழ்க்கையில் சரியாக அமையவில்லை. கடைசியாக தன்னுடைய 40 வயதில் சரத்குமாருடன் காதல் மலர்ந்து இப்பொழுத் வரை அவர்கள் வாழ்க்கை சுமூகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சங்கவி : 90களின் ஆரம்பத்தில் விஜய் , அஜித் நடிக்க வந்த சமயத்தில் அவர்களுக்கு ஆஸ்தான ஜோடியாக இருந்தவர் நடிகை சங்கவி. ஏகப்பட்ட படங்களில் நடித்த சங்கவி அந்த காலகட்டத்தில் நடிகர் விஜயுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதற்கு ஏற்றாற்போல அவர்கள் நடித்த படங்களில் அவர்கள் இருவரும் காட்டிய நெருக்கம் தான். இருந்தாலும் லண்டன் பெண்ணை குறிவைத்து தன் வழியை திருப்பினார் விஜய். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சங்கவி தன்னுடைய 40 வயதில் தான் ஒரு சாஃப்ட்வேர் பொறியாளரை திருமணம் செய்திருக்கிறார்.
நயன்தாரா : இந்த லிஸ்ட்டில் நயனை சேர்க்காவிட்டால் மகா குற்றமாகிவிடும். ஏனெனில் அவர் திருமணம் செய்யும் போது நயனின் வயதை வைத்து தான் ஏராளமான ட்ரோல்கள் வெளியாகின. திருமணத்திற்கு முன் சிம்பு, பிரபுதேவா என இரு நடிகர்களின் வாழ்க்கையில் பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியவர் நயன். அதன் பிறகு இது தன்னுடைய வயசு கோளாறு என்பதை உணர்ந்து அம்மணி பொறுப்புடன் செயல்பட்டு விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்தார்.
இதையும் படிங்க : முகத்தை அழகாக காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 5 நடிகைகள்!.. இதுக்கு பழைய முகமே பரவால்ல போல!..