Connect with us
actress

Cinema News

ஒல்லிக்குச்சி உடம்பா மாறிய குண்டான நடிகைகள்! வாய்ப்புக்காக பண்ணப் போய் இப்படி ஆயிடுச்சே

சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகர், நடிகைகளுக்கு உண்டான ஒரு சவால் அவர்களின் உடம்பை பேணிக்காப்பதுதான். சினிமாவிற்குள் வந்துவிட்டாலே சினிமா என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்துதான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு உடம்பை ஏற்ற வேண்டுமென்றால் கண்டிப்பாக ஏற்றத்தான் வேண்டும். ஒல்லியாக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒல்லியாகத்தான் ஆக வேண்டும்.

இதனால் பிரபலங்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் நடிக்க வந்த நடிகைகள் இன்னும் வாய்ப்பை பெறுவதற்காக கொழுக் மொழுக்னு இருந்த தன் உடம்பை உடற்பயிற்சி , டையட் என செய்து ஒல்லியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சில பேருக்குத்தான் வாய்ப்பு வந்திருக்கிறது.

ராய் லட்சுமி : ராய் லட்சுமி ஆரம்பகாலத்தில் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார். அவர் மிகவும் உயரமான நடிகையாக இருப்பதால் அது தெரியாது. ஆனால் வாய்ப்பிற்காக மிக ஒல்லியாக மாறினார். கழுத்து எல்லாம் நீண்டு போய் பார்க்கவே என்னமோ மாதிரி தெரிகிறார். வாய்ப்புகள் இல்லாததால் க்ளாமர் ரூட்டுக்கு தாவியிருக்கிறார்.

இதையும் படிங்க : தயவு செய்து ‘ஜெய்லர்’ படத்தை பத்தி தப்பா எதுவும் பேசிறாதீங்க! தியேட்டரில் நடந்த அசாம்பாவிதம்

நயன்தாரா : அம்மணி ஐயா படத்தில் நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற லுக்கில் மொழு மொழு என இருப்பார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் படியாக எந்தப் படமும் அமையவில்லை. பில்லா படத்தின் மூலம் தான் தன் உடம்பை குறைத்து அதுவும் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அஞ்சலி : அஞ்சலி ஆரம்பத்தில் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருப்பார். ஆனால் இடையிடையே சதை எல்லாம் வைத்து குண்டாக மாறினார். ஒரு கட்டத்தில் ஃபீல்டு அவுட் ஆகி வாய்ப்பே இல்லாமல் இருந்தார். அதன் பிறகு உடம்பை குறைத்து மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி : இவரை பூசணிக்காயாக பார்த்தே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால் இப்போது இருக்கும் தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அம்மணி இப்படித்தான் இருப்பேன் என மிக ஒல்லியாக இருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெயிலர் விமர்சனம்: டார்க் காமெடி கொஞ்சம்.. கொலவெறி ஆக்‌ஷன் அதிகம்.. ஆனால், கதை?

அனுஷ்கா: அனுஷ்கா ஆரம்பத்தில் ஒல்லியாகத்தான் இருந்தார். ஒரு படத்திற்காக தன் வெயிட்டை ஏற்றி அதன் பிறகு அதை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டார் என்ற தகவலும் பரவி வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top