Cinema News
ஹீரோ மெட்டீரியல் லுக் இல்லாத நடிகர்கள்! ஆனால் படமோ பேயோட்டம் – அட யாருப்பா அவங்க?
Tamil Heros: இன்றைய சினிமாவை பொறுத்தவரைக்கும் கதைகளுக்காக எந்த தயாரிப்பாளர்களும் படங்களை எடுக்க முன்வருவதில்லை. அந்தப் படத்தின் ஹீரோ மார்கெட்டில் எந்தளவுக்கு செல்வாக்கை வைத்திருக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே அவர்களை அணுகுகிறார்கள்.
விஜய் , அஜித், ரஜினி இவர்களெல்லாம் நடித்து வெளியான சமீபகால படங்களில் எந்த மாதிரியான கதைகள் அமைந்திருந்தது என்பதை நம்மால் யோசிக்க முடியும். வன்முறை, கொலை, கொள்ளை இவைகளை மையப்படுத்தியேதான் படங்கள் வெளிவந்தன.
இதையும் படிங்க: ஆமாங்க அவ லவ் பண்றா! தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் போட்டியாளரின் பாசமலர்
ஆனால் கொஞ்சம் திரும்பி பார்த்தால் ஹிரோ லுக் மற்றும் மார்கெட் இல்லாத ஒரு சில நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பேயோட்டம் ஓடியிருக்கின்றன.அதற்கு காரணம் படத்தில் ஒரு வலுவான கதை இருந்ததுதான். அப்படி ஹீரோ மெட்டீரியலாக இல்லாமல் தன் படங்களின் மூலம் மக்களை கவர்ந்த நடிகர்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
பாண்டியராஜன்: இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். குள்ளமான உருவம், திருட்டுப் பார்வை என சினிமாவிற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு ஆள் பாண்டியராஜன். ஆண்பாவம் என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். இயக்கியது ஒன்பது படங்கள்தான். ஆனால் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து அதில் பெரும்பாலான படங்களில் வெற்றியும் பெற்றார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளருக்கே சமையல் செய்து கொடுத்த எம்.ஜி.ஆர்..! ஆனா இந்த ட்விஸ்ட் தான் சூப்பரே..!
லிவிங்ஸ்டன்: இவரும் பாண்டியராஜனும் பாக்யராஜிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள்தான். பாக்யராஜின் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார் லிவிங்ஸ்டன். முதன் முதலில் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தில் அறிமுகமான லிவிங்ஸ்டன் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். சுந்தர புருஷன் படத்தில் தான் ஹீரோவாக முதன் முதலில் நடித்தார். அதன் பின் ஹீரோவாக நடித்த நான்கு ஐந்து படங்கள் நூறு நாள்களை கடந்து ஓடியது.
நெப்போலியன்: அறிமுகமானது வில்லனாகத்தான் அறிமுகமானார். புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடிக்கும் போது நெப்போலியனுக்கு 22 வயதுதானாம். ஆனால் அந்தப் படத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு கேரக்டரில் நடித்து மக்களை ஆச்சரியப்படுத்தினார். ஹீரோவாக நடித்த சீவலப்பேரி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
இதையும் படிங்க: பிங்க் நைட்டியில் பளிச் அழகை காட்டும் பிக்பாஸ் பியூட்டி!.. ஷிவானி ரொம்ப சோம்பேறியாகிட்டாராம்!..
ராஜ்கிரண்: ஹீரோனாலே ஸ்லிம் பாடி, சிவப்பு தோல் என்ற மாயையை முற்றிலுமாக மாற்றியவர் ராஜ்கிரண். படம் முழுக்க வேட்டி சட்டையிலேயே நடித்து ரசிகர்களின் அபிமானங்களை பெற்றார். மாணிக்கம், என் ராசாவின் மனசிலே போன்ற பல படங்கள் இவரின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாக அமைந்தன. ரசிகர்களின் அமோக வரவேற்பையும் பெற்ற படங்களாக மாறின.