ஒரு பொண்ணுக்காக இப்படி சண்டை போடுறீங்களே? முக்கோண காதலை மையப்படுத்தி வெளிவந்த படங்கள்

Published on: July 13, 2023
movie
---Advertisement---

காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வயது வித்தியாசம் பார்க்காமல் எந்த வயதிலும் வருவது தான் காதல். அந்தக் காதலிலே பல வகைப்படும். ஒரு தலை காதல், முக்கோண காதல் என அந்த காதலை மையப்படுத்தி பல வகையாக பிரிக்கலாம். இப்படி தமிழ் சினிமாவில் முக்கோண காதலை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த படங்களை பற்றி தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.

காதல் தேசம் : வினித், அப்பாஸ், தபு ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு அற்புதமான படம். அன்றைய காலகட்டத்தில் பல கல்லூரி மாணவர்களை கொள்ளை கொண்ட படமாக இந்த காதல் தேசம் அமைந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. வினித் அப்பாஸ் முதலில் எதிரிகளாக இருக்கும் பட்சத்தில் எதிர்பாராத விபத்து அவர்களை சேர்க்க வைக்கிறது. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் தபுவை இருவருமே காதலித்து கடைசியில் யாரை தபூ ஏற்றுக் கொள்கிறார் என்ற அடிப்படையில் அமைவது தான் இந்தப் படம். முக்கோண காதலுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்த படமாக இது இருந்தது.

kadhal
kadhal

மின்சார கனவு : பிரபுதேவா, அரவிந்த்சாமி காஜல் ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த படம் மின்சார கனவு. அரவிந்தசாமி காஜோலை காதலிக்க அவர்கள் காதலுக்கு தூதுவாக பிரபுதேவா வருவதும் அதன் பிறகு பிரபு தேவாவின் விளையாட்டுத்தனமான செய்கைகளை பார்த்து ரசித்த காஜோல் அவர் மீது காதல் வயப்படுவதும் கடைசியில் காஜோலை கரம் பிடிப்பது யார் என்ற வகையில் அமைவது தான் இந்தப் படம். யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் காட்சியை இந்த படத்தில் வைத்து ஆச்சரியத்தில் வீழ்த்தியிருப்பார் இந்த படத்தின் இயக்குனர்.

minsara kanavu
minsara kanavu

மின்னலே : கௌதம் மேனனின் முதல் படம். அப்பாஸ், மாதவன், ரீமாசென் ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ரீமாசென்னை அங்கங்கு பல இடங்களில் பார்த்து காதல் வயப்படும் மாதவன் ரீமாசென்னை திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் அப்பாஸ் போல நடித்து ரீமாசென்னை காதலிக்க வைப்பதும் கடைசியில் உண்மை தெரிய வர இவர்களின் காதல் என்னானது என்பதுதான் இந்த படத்தின் கதை.

minnale
minnale

யாரடி நீ மோகினி : இந்தப் படமும் முக்கோண காதலை மையப்படுத்தி அமைந்த படம்தான். ஏற்கனவே நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் அவருடைய உறவினர். அவரையே தனது தோழனாக வைத்திருக்கும் தனுஷ். தனுஷும் நயன்தாராவும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்க நயனை காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு கட்டத்தில் தனது நண்பர் தான் நயனை திருமணம் செய்ய போகும் நபர் என தெரிய வந்ததும் காதலில் இருந்து பின் வாங்குகிறார் தனுஷ். அதன் பிறகு நயனுக்கு தனுஷின் மீது காதல் வர நண்பனுக்காக தனுஷ் விட்டுக் கொடுக்கிறாரா? இல்லை காதலை ஏற்கிராரா?என்பதுதான் இந்த படத்தின் கதை. படம் வெளியாகி ஒரு மாஸ் வெற்றியை பதிவு செய்தது.

yaradi
yaradi

இயற்கை : ஷியாம், அருண் விஜய் ,குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் இயற்கை. இந்தப் படம் வெளியான சமயத்தில் ஷியாம் பெண்களை கொள்ளை கொண்ட நாயகனாக வலம் வந்தார். குட்டி ராதிகாவை உருகி உருகி காதலிக்கும் ஷியாம் தன்னையும் குட்டி ராதிகா காதலிக்கிறார் என்று நினைத்துக் கொண்டு நாட்களை கடக்க ஒரு நேரத்தில் குட்டி ராதிகா வேறு ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அது அவருக்கு மட்டும் இல்லாமல் படம் பார்த்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை மிகவும் சஸ்பென்ஸ் ஆக கொண்டு போய் சேர்த்திருப்பார் இந்தப் படத்தின் இயக்குனர்.

iyarkai
iyarkai

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.