Cinema News
இந்த படத்துக்கு ஏண்ட்டா வந்தோம்? ரசிகர்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிய 5 படங்கள்
சினிமா உலகில் எல்லா படங்களும் நமக்கு பிடிப்பதில்லை. ஒரு சில படங்கள் ரசிகர்களை பூர்த்தி செய்யலாம். ஒரு சில படங்கள் பூர்த்தி செய்யாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா படங்களுமே ரசிகர்களுக்கு பிடித்த படங்களாக அமைவதில்லை. அந்த வகையில் ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம் என வருத்தப்பட வைத்த ஒரு ஐந்து படங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
தொடரி : பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் தொடரி. பிரபு சாலமனை பொருத்தவரைக்கும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் மைனா மற்றும் கும்கி. அந்த படங்களில் முழுவதும் இயற்கையை மட்டுமே காட்டி படத்தை ஓட விட்டிருப்பார். ஆனால் இந்த தொடரி படத்தில் முழுவதுமாக எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் செயற்கைத்தனமாகவே அமைந்திருக்கும். வழக்கம் போல ஓடும் ரெயிலில் ஏற்படும் காதல், அந்த காதல் கைகூடியதா? காதலுக்கு தடையாக வருவது யார் என்பதை சொல்லும் விதமாக தொடரி அமைந்தது. ஆனால் தனுஷுக்கு பெரிய மொக்கையாக அமைந்தப் படமாகவே ரசிகர்கள் இதை பார்த்தனர்.
கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம்தான் கோப்ரா. விக்ரம் பல்வேறு கெட்டப்களை போட்டு ஒரு ஃப்ரொஃபசனல் கில்லராக இருக்கிறார். அதே சமயம் இவர் ஒரு உள்ளூரில் வாத்தியார் வேலைதான் பார்த்து வருகிறார். ஆனால் இவர் எப்போ போகிறார் எப்போ வருகிறார் என்று பக்கத்தில் இருக்கும் வீட்டார்களுக்கே தெரியாது. ஆனால் விக்ரமை பல நாள்கள் பின் தொடர்ந்து அவர் யார்? எதற்காக கொல்கிறார் என்பதை விவரிக்கும் படமாக கோப்ரா அமைந்தது. ஆனால் கதை என்னமோ பழசுதான். வளவளனு படத்தை 3 மணி நேரத்திற்கும் எடுத்து வைத்து இயக்குனர் ரசிகர்களை படுகொலை செய்திருப்பார். படத்தை பார்த்த பெரும்பாலானோர் அழுகாத குறையாகத்தான் வெளியே வந்தார்கள்.
பிரின்ஸ் : தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் பிரின்ஸ். கதைப்படி சாதி சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அப்பா , தன் மகனுக்கும் அதே பாடத்தை கற்று கொடுத்து ஒரு கலப்பு திருமணத்தைத் தான் செய்யவேண்டும் என ஊக்குவிக்கிறார். பையனான சிவகார்த்திகேயன் ஒரு பள்ளியில் வாத்தியராக போகிறார். அதே பள்ளியில் ஆங்கில வகுப்புக்கு ஆசிரியையாக வருகிறார் ஒரு பிரிட்டிஸை சார்ந்த நம்ம ஹீரோயின். இருவரும் காதலிக்க அப்பாவான சத்யராஜ் ஒத்துக்கவில்லை. அந்த கால வெள்ளையன் கதையை சொல்லி போர் அடிக்கிற மாதிரி காட்சி. மேலும் படத்தில் காமெடியும் வொர்க் ஆகவில்லை. இப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் போனவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
சுறா : விஜய்க்கு 50 வது படமாக அமைந்தது தான் சுறா. ஆனால் மற்ற கமெர்ஷியல் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய பஞ்ச் வசனங்களையும் பேசியிருப்பார். வழக்கம்போல வில்லன்களை பழிவாங்கும் ஒரு ஹீரோ என்பது தான் படத்தின் ஒன்லைன். ஒவ்வொரு காட்சியையும் ஒட்ட வைத்திருக்கும் மாதிரிதான் இருந்தது. ஸ்கீரீன் ப்ளே மொத்தமாக வேஸ்ட். அரசியல் பேசுகிறேன் என்று அடிக்கடி பஞ்ச் பேசி பேசி கடுப்பேத்தியிருப்பார் விஜய். மொத்தமாக 50 வது படம் என்பது எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷலாகத்தான் இருக்கும். ஆனால் விஜய்க்கே இது ஏமாற்றம் தான்.
10 எண்றதுக்குள்ள : எந்த ஒரு ஒரிஜினாலிட்டியும் இல்லாத படமாக இந்தப் படம் அமைந்தது. டிரான்ஸ்போர்ட்டர் போல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக படம் முழுக்க காரையே காட்டி பறக்க விட்டிருப்பார்கள். மேலும் சாதிக்கலவரம் உள்ள ஒரு வட மாநிலத்தின் கதையையும் உள்ளே சொருவி அதில் திடீரென சமந்தாவை வில்லியாக காட்டி காமெடி பண்ணியிருப்பார் இயக்குனர். ஆக மொத்தம் விஜய் மில்டன் இந்தப் படத்தை எப்படி நினைத்து எடுத்தார் என்பதே தெரியாத வகையில் படம் ரசிகர்களை போர் அடிக்க வைத்ததுதான் மிச்சம்.