அண்ணன்- தங்கை பாசத்தை கதற கதற காட்டிய திரைப்படங்கள்! எல்லாரையும் தோள்ல சுமந்த ராஜ்கிரணின் பாசம் இருக்கே?
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கதைகள் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை மக்களை கவர்வதற்காக எத்தனையோ படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான படங்கள் ஒரே கதையின் அடிப்படையில் அமைந்தாலும் அதை காட்டும் விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கின்றன. குறிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை வைத்து அன்று முதல் இன்று வரை எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை ரசிக்கும் ரசிகர்களின் பார்வை வித்தியாசப்படுகிறது.
அப்படி தங்கைக்காகவே வாழும் அண்ணன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து அமைந்த படங்களை தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.
சின்னத்தம்பி : வாசு இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படம் சின்னத்தம்பி. மூன்று அண்ணன்கள் ஒரு தங்கை என அழகாக ஆரம்பிக்கும் இந்த படத்தின் கதை போக போக தங்கையின் மனதில் காதல் என ஒன்று வரும்போது அந்த அண்ணன்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது? அவர்கள் எப்படி மாறுகிறார்கள்? என்பதை அழகாக விளக்கும் படமாக சின்னத்தம்பி படம் அமைந்திருக்கும். தங்கையாக குஷ்புவும் மூத்த அண்ணனாக ராதா ரவியும் குஷ்புவின் காதலனாக பிரபுவும் அவரவர் கதாபாத்திரங்களில் அப்படியே வாழ்ந்திருப்பார்கள்.
பாண்டவர் பூமி : சேரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜ்கிரன் நடிப்பில் வெற்றியடைந்த படமாக இது அமைந்தது. இதுவும் மூன்று அண்ணன்கள் ஒரு தங்கை என அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக அமைந்தே இந்த படம் வெளிவந்திருக்கும். தங்கை யாரோ ஒருவரை காதலிப்பது தெரியவர இளைய அண்ணனாக இருக்கும் ரஞ்சித் அந்த காதலனை வெட்டி ஜெயிலுக்கு போகிறார். கூடவே தன் தங்கையையும் கொலை செய்து விடுகிறார். தன் குடும்பத்திலேயே தன் தங்கை சாயலில் தன் அக்கா வயிற்றில் ஒரு பெண் பிறக்க அவளை ரஞ்சித்திற்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்ய ஜெயிலில் இருந்து வரும் ரஞ்சித் அந்த பெண்ணை பார்க்கும்போது தன் தங்கை சாயலில் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என விலகி விடுகிறார். அதன் பிறகு காதல் பிரிவு குடும்பம் என இந்த படத்தின் கதையை அழகாக நகர்த்தி காட்டி இருப்பார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்து ரசித்த விஜயகாந்த் பாடல்!.. அட இது தெரியாம போச்சே!..
சமுத்திரம் : சரத்குமார், முரளி, மனோஜ் ,காவேரி, அபிராமி ஆகியோர்கள் நடிப்பை வெளிவந்த இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்தன. தன் தங்கை ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை கொடுத்த அண்ணன்கள், அவர் திருமணம் செய்து கொண்ட அந்த மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே சரத்குமார் மீது விரோதத்தில் இருக்க தங்கையை வைத்து சரத்குமார் மற்றும் அவரது தம்பிகளை பழி வாங்கும் எண்ணம், தங்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து நடுத்தெருவில் நிற்கும் இந்த அண்ணன்கள் என ஒரு பாசப் போராட்டத்தில் நகரும்.
காதலுக்கு மரியாதை : இது ஒரு அழகான காதல் கதை என்றாலும் இதற்கு பின்னணியில் தங்கை மீது வைத்திருக்கும் அண்ணன்களின் பாசத்தையும் அழகாக விளக்கும் படமாக இது அமைந்திருக்கும். செல்லமாக வளர்க்கும் தங்கை வேறொரு மதம் சார்ந்த ஒருவரை காதலிக்கிறார் என தெரிந்து காதலனை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் துடிக்க இது தெரிந்த அந்த தங்கை காதலனோடு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஆனாலும் அண்ணன்களின் பாசம் தங்கையை மேற்கொண்டு செல்ல விடாமல் மீண்டும் அண்ணன்களை தேடி வருவது, ஒரு பக்கம் காதலனை மறக்க முடியாமல் தவிப்பது என கதை சுவாரஸ்யமாக செல்லும். தங்கையாக ஷாலினியும் அண்ணன்களாக ராதாரவி, தலைவாசல் விஜய், காதலனாக விஜய் படத்தில் நடித்திருப்பார்கள்.