தனுஷ் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது.. இப்பவாவது சொன்னீங்களே

by Rohini |   ( Updated:2025-04-02 09:48:03  )
dhanush
X

dhanush

Dhanush: தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான போட்டி என்றால் அது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்களுக்குள்தான் இருக்கும் என்பதைப் போல ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கின்றது. சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ் தான் என்பது அனைவருக்குமே தெரியும். தன்னுடைய தயாரிப்பில் உருவான மூணு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை போட வேண்டும் என அடம்பிடித்து போட்டவர் தனுஷ்.

ஆனால் அதை எப்பொழுதுமே சிவகார்த்திகேயன் மறந்ததே கிடையாது. அது மட்டுமல்ல எதிர்நீச்சல் படத்திலும் அவர்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தனுஷ். இருவருக்கும் இடையே சண்டை இருப்பதாகவும் அடிக்கடி இருவரும் மோதிக் கொள்வதாகவும் ஒரு தகவல் வந்து கொண்டிருந்தது. ஆனால் இருவருக்கும் அப்படி என்னதான் நடந்தது? நடந்து கொண்டிருக்கின்றது என்பதை பற்றி பிரபல நடிகர் ஜீவா ரவி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதாவது சிவகார்த்திகேயன் வளர்ச்சி மீது தனுஷுக்கு எப்போதுமே ஒரு அக்கறை இருந்திருக்கிறது. இப்போது வரை இருந்து கொண்டு இருக்கின்றது. அவர் வளர்ச்சியை பார்த்து தனுஷ் மிகவும் சந்தோஷப்படுவார். காக்கி சட்டை படத்தின் படப்பிடிப்பில் கூட தனுஷ் சிவகார்த்திகேயனை வந்து சந்தித்து விட்டு சென்றார். ஆனால் இருவருக்கும் இடையே சண்டை இருப்பதாக மக்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் .

ஆனால் சிவகார்த்திகேயனை தனுஷ் ரசிப்பார்.பெர்ஷனலாக சிவகார்த்திகேயனை தனுஷுக்கு மிகவும் பிடிக்கும். சிவகார்த்திகேயனுக்கும் தனுஷை மிகவும் பிடிக்கும். 10 பேர் 10 விதமாக சொல்வார்கள். அதனால்தான் இரண்டு பேரும் ஒரே ஷோவில் கலந்து கொள்வது, ஏன் விஜய் டிவியில் ஒரு ஷோவில் கூட இருவரும் கலந்து கொண்டு சந்தோஷமாக பேசியது என தங்களுக்குள் சண்டை இல்லை என்பதை போல் காட்டினார்கள்.

அப்படியே சண்டை இருந்தாலும் தப்பு இல்லையே. ஒரு மனுஷனுக்கு எல்லாமே சரியாக போய்க் கொண்டிருக்குமா? ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சரியாகிவிடும். நிரந்த எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பரும் கிடையாது. ஆனால் இவர்களை பொறுத்தவரைக்கும் சிவகார்த்திகேயன் தனுஷை மறக்கவே மாட்டார். அதே மாதிரி தனுஷும் என்னுடைய டேலண்ட் சிவகார்த்திகேயன் என சிவகார்த்திகேயனையும் மறக்க மாட்டார்.

dhanush

தனுஷ் அறிமுகப்படுத்தினாலும் சிவகார்த்திகேயன் தன்னைத்தானே அடுத்தடுத்து செதுக்கிக் கொண்டார். இது தனுஷுக்கும் ஒரு வகையில் பெருமைதானே. இருவரும் ஜாலியாகத்தான் பேசுவார்கள். உண்மை என்ன என்பது அங்கு இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என ஜீவா ரவி கூறினார்.

Next Story