நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள்! வாய்க்கொழுப்பால் பல்பு வாங்கிய வடிவேலு

Published on: August 17, 2023
vadi
---Advertisement---

ஒரு படம் வெற்றி படமாக அமைவதற்கு பின்னணியில் எத்தனையோ சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் என நடந்து அதை சுமூகமாக தீர்த்து பின் அவர்களுக்குள் இணக்கம் கண்டு இப்படி பலவித இன்னல்களைத் தாண்டி தான் ஒரு படம் வெளி வருகின்றது. அந்த வகையில் படப்பிடிப்பில் தன்னுடைய இயக்குநர்களிடமே சண்டை போட்ட நடிகர்களை பற்றி தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.

விஷால் – மிஷ்கின்: துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றினார்கள். அந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு துப்பறிவாளன் 2 என்ற படத்தை மீண்டும் எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு திடீரென விஷால் இந்த படத்தை பாதியில் இருந்து நான் தான் இயக்கப் போகிறேன் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் இந்தப் படத்திற்கான பொருட்செலவை மிஷ்கின் பெரிய அளவிற்கு கொண்டு சென்று விட்டார் என்றும் தகாத வார்த்தைகளால் பேசி விஷால் அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மிஷ்கினும் விஷாலை ஒரு பொது மேடையில் பொறுக்கி பையன் சார் அவன் என பேசி இருந்தார். அப்பொழுது ஆரம்பித்த அந்த பிரச்சனை இன்றுவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

சூர்யா – ஹரி: ஹரியின் இயக்கத்தில் சூர்யா தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். வேலு, ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஆரம்பத்தில் சில சில பிரச்சனைகள் இருந்து வந்ததாம். இப்பொழுது பாலா தன்னை ஓடவிட்டார் என்று சொல்லும் சூர்யா அப்பொழுதே ஹரியும் அதை செய்து இருக்கிறாராம். அப்பவே அவர்கள் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து இப்பொழுது தான் சுமூகமாக தீர்க்கப்பட்டு இருக்கிறதாம்.

சூர்யா – பாலா : இவர்கள் பிரச்சினை தான் பெரும் பிரச்சனையாக சில காலம் ஓடிக் கொண்டிருந்தது. சூர்யா இப்பொழுது ஒரு அந்தஸ்தை அடைந்தும் அவரை இன்னும் ஆரம்ப கால சூரியாவாகவே பாலா பார்த்து வந்தார். அதனாலேயே வணங்கான் திரைப்படத்தின் போது அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. திரும்பவும் இணைந்து படம் பண்ண போகிறோம் என்று மீண்டும் மீண்டும் இணைந்த இந்த கூட்டணி கடைசி வரை ஒன்று சேராமலேயே சென்றது.

வடிவேலு – சங்கர்: வடிவேலு சங்கர் இணைந்து 24 ஆம் புலிகேசி என்ற படம் தயாராக இருந்த நிலையில் நான் சொல்கிற ஆட்களை தான் படத்தில் போட வேண்டும். நான் ஓகே சொன்ன சீன்களை மட்டும் தான் படத்தில் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் சங்கருக்கே போட்டிருக்கிறார் வடிவேலு. இதன் காரணமாக அந்தப் படம் அப்படியே நின்று விட்டது.

ஆதி ரவிச்சந்திரன் – சிம்பு: விஷால் நடிப்பில் தயாராகி ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி.இந்தப் படத்தை இயக்கியவர் தான் ஆதித் ரவிச்சந்திரன். இவர் சிம்புவை வைத்து அடங்காதவன் அசராதவன் அஞ்சாதவன் என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தில் இயக்குநரை படாத பாடு படுத்தி ஒரு வழிக்கு செய்து விட்டார் சிம்பு. பல கண்டிஷன்களை போட்டு கடைசியில் ஸ்க்ரிப்டிலேயே தலையிட்டு படத்தை வேறு மாதிரியாக கொண்டு போய் விட்டாராம். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.