தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ?.. விழிபிதுங்கி நிற்கும் தனுஷ்.. ‘வாத்தி’ படம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுதானா?..

by Rohini |   ( Updated:2023-01-19 14:05:26  )
dha
X

dhanush

தமிழ் சினிமாவில் டாப் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் திரைக்கு வெளிவர காத்திருக்கும் படம் ‘வாத்தி’. இந்த படத்தின் செடியூல்கள் எல்லாம் முடிந்து டிசம்பரிலேயே படம் வெளிவர வேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் அவதார் ரிலீஸ் ஆனதால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியது படக்குழு.

அதனால் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சென்று சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் படம் என்பதால் இந்த படத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள். ஆனால் பிரின்ஸ், வாரிசு போன்ற படங்கள் மாதிரியே இந்த படமும் மண்ணை கவ்வப் போகிறதா என்ற பயமும் ஒரு பக்கம் ரசிகர்களுக்கிடையே இருந்து வருகிறது.

dha1

dhanush

ஏனெனில் இதற்கு முன்னர் சிவ்கார்த்திகேயன், விஜய் ஆகியோரை வைத்து தெலுங்கு இயக்குனர்கள் செய்த சேட்டைகளை கண்கூடாக பார்த்து விட்டனர் ரசிகர்கள். அதே வகையில் தான் வாத்தி படமும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி அவரே எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

இதையும் படிங்க : பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகும் செல்வராகவன்… அதிரிபுதிரியாக களமிறங்கும் படக்குழு…

ஒருவேளை பிரின்ஸ், வாரிசு படங்களின் விமர்சனங்களை பார்த்து கூட தனுஷ் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறிவருகிறார். மேலும் இயல்பாகவே தனுஷ் ஒரு இயக்குனர் என்பதால் இந்த படங்களின் தோல்வி அவரை பெரும் தாக்கத்திற்கு ஆளாக்கியிருக்கும்.

dha2

dhanush

அதன் காரணமாகவே மேலும் படத்தில் சில விஷயங்களை மாற்றச் சொல்லியிருப்பார், அதனாலேயே படம் வெளியாவதில் தாமதம் காட்டி வருகிறார்கள் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறினார். இந்தக் கடலில் தனுஷாவது பிழைப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story