ரெண்டு பொண்ணுங்க ஒண்ணு கூடிட்டா போதும்…பேசி பேசியே விக்ரமை டென்ஷனாக்கிய கதாநாயகிகள்..!

by Rajkumar |   ( Updated:2023-05-03 04:06:21  )
ரெண்டு பொண்ணுங்க ஒண்ணு கூடிட்டா போதும்…பேசி பேசியே விக்ரமை டென்ஷனாக்கிய கதாநாயகிகள்..!
X

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பல வருடங்களாக சினிமாவில் போராடி வாய்ப்பை பெற்றார். பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் விக்ரம். சாதரணமாக சண்டை மட்டும் போடும் நாயகனாக இல்லாமல் விக்ரம் முடிந்தவரை சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். காசி, ஐ போன்ற திரைப்படங்கள் அதற்கு சான்றுகளாகும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் விக்ரமிற்கு இந்த திரைப்படம் அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் த்ரிஷாவும் பேசியே விக்ரமை கடுப்பேத்தியுள்ளனர். இதை நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். த்ரிஷா சினிமாவிற்கு வந்தபோது ஓரளவு வெள்ளையாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் இப்போது அதிக வசீகரமாக இருக்கிறார் த்ரிஷா. எப்படி இவர் இவ்வளவு அழகாக இருக்கிறார் என ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் பேசிக்கொண்டே வந்துள்ளார். அப்போது ஏரோப்ளேனில் த்ரிஷாவிற்கு அருகில் விக்ரம் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட பல மணி நேரங்களாக த்ரிஷாவும், ஐஸ்வர்யா லெட்சுமியும் அழகு குறிப்புகள் குறித்து பேசி வந்துள்ளனர்.

இதனால் கடுப்பான விக்ரம் ஆள விடுங்க சாமி என சீட்டை விட்டு எழுந்து வேறு சீட்டுக்கு சென்றுள்ளார். இந்த அளவிற்கா ஒருத்தரை வெறுப்பேத்துவது என நெட்டிசன்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் பாலச்சந்தர் செய்யும் ட்ரிக்…இதனால்தான் ஹீரோயின்களுக்கு அவரை ரொம்ப பிடிக்குமாம்!..

Next Story