Categories: latest news

என்னய்யா கடைசியில் இப்படி பண்ணிட்டீங்க… ஏமாந்த விஜய் ரசிகர்கள்… தளபதி 69 படத்தின் அப்டேட்..?

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கோட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி ரிலீஸ்-ஆன நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கோட் திரைப்படம் வெறும் 4 நாட்களில் 288 கோடிகளை அள்ளியது.

இந்த வாரமும் புதிதாக எந்த தமிழ் திரைப்படங்களும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் இவருக்கு சம்பளம் மட்டும் 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்று தயாரிப்பாளரை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருக்கின்றார் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் கே வி என் ப்ரொடக்சன் நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன் தமிழ் திரையுலகில் இந்த திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக கால் பதிக்கிறது.

அதனால் முதல் படம் பெரிய ஹீரோவின் திரைப்படமாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தளபதி விஜயின் படத்தை தயாரிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு 275 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் ஜிஎஸ்டியையும் தயாரிப்பு நிறுவனமே செலுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.

விஜயின் சம்பளத்திற்காக மட்டும் 300 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் நடிகர் விஜயின் உணர்ச்சி பூர்வமான வீடியோ ஒன்றையும் அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago