இதுக்குதான் வெயிட்டிங்!...அஜித் ஃபேன்ஸ் ரெடியாகுங்க!.. விரைவில் வெளியாகும் வலிமை...

அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த மூவர் கூட்டணியில் தயாராகும் இரண்டாவது திரைப்படம் வலிமை. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் வலிமை திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. மேலும், எப்போது ரிலீஸ் என்ற தகவலும் தற்போது வரை தெரியவில்லை. இதனால், வலிமை ரிலீஸ் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வேளையில் தற்போது ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதாவது, தமிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கும் இரவு நேர ஊரடங்குயும் எப்போது தளர்த்துகிறது.
இதையும் படியுங்களேன்- RRR-ஐ பின்தொடரும் வலிமை.! இந்த முடிவு சரியா வருமா?!
அதற்கடுத்து உடனே வலிமை படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு ரெடியாக காத்துக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு வருடம் இருக்காது என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. அது உறுதியாகும் பட்சத்தில் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வலிமை ரிலீஸ் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.