எம்ஜிஆர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்று போற்றப்படும் ஒரு உயர்ந்த மனிதர். அவர் தனது படங்களில் எப்போதுமே மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துகளையேச் சொல்வார். அவர் எந்த ஒரு படத்தில் நடித்தாலும் அதில் வாழ்க்கைக்கான தத்துவம் கண்டிப்பாக இருக்கும். அதிலும் எம்ஜிஆர் அதைப் பேசி நடிக்கும்போது பாமர மக்களுக்கும் ‘சட்’டென்று நெஞ்சில் ஆழப் பதிந்து விடும்.
நஷ்டம் ஏற்படாது
அப்படி ஒருமுறை அவர் சொன்ன ஒரு பஞ்ச் டயலாக் தான் இது. ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் பல பேர் உண்டு. ஆனால் நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார். அது உண்மை தான். அவரை வைத்துப் படம் தயாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது.
அதனால் தான் சொல்லி இருப்பார். அது மட்டும் அல்லாமல் கட்சி ஆரம்பித்ததும் அவரது கொள்கையைப் பின்பற்றிச் சென்ற தொண்டர்களையும் சொல்லலாம். அந்த வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் தான் இது.
திட்டித் தீர்த்த அசோகன்
எம்ஜிஆரை வைத்து அசோகன் தயாரித்த படம் நேற்று இன்று நாளை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது பல பிரச்சனைகள் வந்ததாம். பல தடங்கல்கள் வந்ததால் அது அசோகனுக்கு ரொம்ப டென்ஷனைத் தந்து விட்டது. மனுஷன் பயங்கரமான கோபத்துக்கு ஆளாகிவிட்டார். எம்ஜிஆர் உள்பட மதத்தலைவர்கள் என பலரையும் திட்டித் தீர்த்து விட்டாராம்.
எம்ஜிஆரால் தான் பிழைத்தேன்
அப்படி ஒரு கோபம் அவருக்கு வந்துள்ளதாம். அதுக்கு என்ன காரணம்னா எல்லாரும் சேர்ந்து அவரை ஏமாற்றி விட்டார்களோ என்ற ஒரு உணர்வு வந்து விட்டதாம். அதனால் தான் அவ்ளோ கோபம் வந்துருக்கு. அப்புறம் படம் ரிலீஸானது. முதல் ரவுண்டுல சரியாகப் போகல. அடுத்த ரவுண்டுல மிகப்பெரிய வெற்றி. போட்ட முதலும் கிடைத்துவிட அப்போ தான் அசோகன் சொன்னாராம். அப்பாட, ‘எம்ஜிஆரால் தான் பிழைத்தேன்’ என்று.
நேற்று இன்று நாளை
Also read: வெட்கம், மானம் இல்லையா?… தனுஷ் ராதிகாவை திட்டியதன் பின்னணி?!… வெளிவந்த உண்மை..!
1974ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் அசோகன் தயாரிக்க எம்ஜிஆர் நடித்து வெளியான படம் நேற்று இன்று நாளை. ஜோடியாக மஞ்சுளா நடித்து இருந்தார். இவர்களுடன் நம்பியார், அசோகன், லதா, ராஜஸ்ரீ, எம்.ஜி.சக்கரபாணி, பண்டரிபாய், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. பாடும்போது நான், தம்பி நான் படிச்சேன், நீ என்னென்ன சொன்னாலும், இன்னொரு வானம், நெருங்கி நெருங்கி, அங்கே வருவது யாரோ ஆகிய பாடல்கள் உள்ளன.
Kanguva: அதிக…
16வயதினிலே படத்திற்குப்…
பிரதீப் ரங்கநாதன்…
Nayanthara: தனுஷ்…
திரைப்பட விநியோகிஸ்தர்…