’வாரியர்’ படதலைப்புக்கு ஒரு லட்சம் பரிசு...! லட்சத்தை தட்டிச்சென்ற திரிஷா பட இயக்குனர்...

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி. இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தை எடுத்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.
இது ராம் பொத்தினேனிக்கு 19 வது படமாகும். ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் புல்லட் சாங் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
இதில் போலிஸ் கேரக்டரில் ராம் பொதினேனி நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் மாஸ் என்டர்டெய்னர் படமாக தி வாரியர் உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் ராம் இந்த படத்தில் தான் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பின்னர் தான் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதாம். என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கும் போது படத்தின் தயாரிப்பாளர் யார் நல்ல தலைப்பை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவிக்க படக்கலைஞர்கள் தலைப்புகளை கொண்டு வந்தனராம். அப்போது ஸ்ரீகாந்து திரிஷா நடிப்பில் உருவான மனசெல்லாம் படத்தின் இயக்குனர் சந்தோஷ் தான் இந்த தலைப்பை கூறினாராம். அந்த மேடையிலயே அவருக்கு ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது.