Cinema News
1000 பெரியாரை கண்முன் நிறுத்திய பாலா – கோயிலுக்கு வெளியே இருந்த பிச்சைக்காரனை அழைத்து என்ன செய்தார் தெரியுமா
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாலா. தற்போது வணங்கான் படத்தில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் பாலாவிடம் வரும் போது பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை விட்டுவிட்டுதான் வர வேண்டும்.
அந்தளவுக்கு பாலாவிடம் மறுபிறவி எடுத்து விட்டுதான் போவார்கள். அப்படித்தான் சூர்யாவும் ஆரம்பத்தில் வந்தார். நந்தா படம் சூர்யாவின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதை மனதில் வைத்து தான் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் சூர்யாவின் பெருமை, புகழ் இதை எதையும் பாலா கருத்தில் கொள்ளவில்லை.
இதையும் படிங்க : நீங்க என்ன சொல்றது.. நான் சொல்றேன்! ‘ஜெய்லர்’ நல்ல படம்னு சொல்லமுடியாது – பிரபல தயாரிப்பாளர் கருத்து
எப்பவும் போல சூர்யாவிடம் தன் வேலையை காட்ட சூர்யாவோ ரசிகர்கள் மத்தியில் இப்போது எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இதற்கு மேல் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என போய்விட்டார். அதன் பிறகு அருண்விஜயை வைத்து சூர்யா நடித்த காட்சிகள் அனைத்தும் மறுபடியும் ரீ சூட் எடுத்தனர்.
இப்போது ராமேஸ்வரத்தில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். பாலா அடிக்கடி ராமேஸ்வரம் செல்வது வழக்கமாம். ஏனெனில் அங்கு ஒரு பிச்சைக்காரனை பார்ப்பதற்காகவே போவாராம். ராமேஸ்வரம் போனதும் அந்த பிச்சைக்காரனை வரவழைத்து அவரிடம் மனம்விட்டு பேசுவாராம். அப்படி ஒரு சமயம் பாலா அங்கு உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் போது இந்த பிச்சைக்காரனை நன்றாக சுத்தம் செய்து அவரையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றாராம்.
இதையும் படிங்க : புருஷன் பேச்சை கேட்காத பொண்டாட்டி!.. தனியா போனது தப்பா போச்சேன்னு வருந்தும் பிரபல நடிகர்!..
அதை பார்த்ததும் அர்ச்சகர்களுக்கு ஒரே ஷாக்காம். எனினும் பாலாவிற்காக பொருத்துக் கொண்டார்களாம். அதன் பிறகு பாலா அந்த கோயிலுக்கு அடிக்கடி சென்றதால் பரிவட்டம் கட்ட அர்ச்சகர்கள் முற்பட்டார்களாம். ஆனால் பாலாவோ வேண்டாம் வேண்டாம் , இதை அவனுக்கு கட்டுங்கள் என்று பிச்சைக்காரனை சுட்டிக்காட்டினாராம்.
எல்லாம் யோசிக்க ம்ம் கட்டுங்கள் என்று சொன்னாராம். வேறு வழியில்லாமல் பாலா சொன்னமாதிரி அந்த பிச்சைக்காரனுக்கு பரிவட்டத்தை கட்டினார்களாம். அதன் பிறகு பாலா அந்த கோயிலை மூன்று முறை வலம் வந்து சென்றாராம். இப்படி பாலாவை பற்றி சிறுமைகளை பேசிக்கொண்டிருந்தாலும் அவருக்குள் இப்படி ஏராளமான பெருமையான சில விஷயங்களும் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.