
Cinema History
சக நடிகர்களை இப்படி கேவலப்படுத்துவாரா வடிவேலு?!.. இவ்வளவு சைக்கோத்தனமா?!…
தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு குடை பிடிக்கும் வேடத்தில் நடிக்க துவங்கி பின்னர் முன்னணி காமெடி நடிகனாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. திறமையான நடிகர்தான். காமெடி, குணச்சித்திரம் என எந்த வேடமென்றாலும் சிறப்பாக நடிப்பார். ஆனால், அவர் திமிறு பிடித்த நடிகர் என்பது திரையுலகில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மதுரையிலிருந்து சென்னை வாய்ப்பு தேடி, ராஜ்கிரண் மற்றும் விஜயகாந்தால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி காமெடியில் உச்சம் தொட்டவர் வடிவேலு. சமூகவலைத்தளங்களில் இவரை வைத்துதான் பல மீம்ஸ்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால், மக்களை சிரிக்க வைக்கும் வடிவேலுவின் உண்மையான குணம் பற்றி தெரிந்து கொண்டால் ரசிகர்கள் அதிர்ந்து போவார்கள். ஏன், அந்த செய்தியை நம்பவும் மறுப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு செய்தியைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

vadivelu
பொதுவாக அப்போது மார்க்கெட்டில் பெரிய காமெடி நடிகர்களை நம்பியே துணை காமெடி நடிகர்கள் இருப்பார்கள். கவுண்டமணி, சந்தானம், வடிவேலு என அவர்களுடன் காமெடி காட்சிகளில் தொடர்ந்து நடிப்பார்கள். போண்டா மணி, அல்வா வாசு என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுப்பது அப்போது அதிக படங்களில் நடிக்கும் அந்த காமெடி நடிகர்தான்.
அந்த காமெடி நடிகரின் அலுவலகத்திற்கு தினமும் காலை இவர்களெல்லாம் சென்று மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். அந்த நடிகர் ‘நாளைக்கு நீங்களாம் ஷூட்டிங் வந்திருங்க’ என சிலரை சொல்வார். மற்றவர் எல்லாம் சென்றுவிடுவார்கள். இதுதான் துணை காமெடி நடிகர்களின் நிலைமை.

vadivelu
இதில், வடிவேலு இவர்களையெல்லாம் இப்படி நடத்துவார் என்பது தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். வடிவேலு பீக்கில் இருந்தபோது சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலுவின் அலுவலகத்திற்கு தினமும் கலை 7 மணிக்கு துணை காமெடி நடிகர்கள் சென்று விடுவார்கள். அங்கே ஒரு தண்ணீர் தொட்டி இருக்குமாம். அதன் அருகே எல்லோரும் நிற்பார்களாம்.
அலுவலகம் வரும் வடிவேலு இரண்டு மணிநேரம் கழித்து மேலே இருந்து எட்டிபார்ப்பாராம். யாராவது தண்ணீர் தொட்டி மீது சாய்ந்து நின்றால் அவருக்கு ‘நாளை வேலை இல்லை’ என அனுப்ப சொல்லி விடுவாராம். அதேபோல், யாராவது கால் வலி வந்து கீழே உட்காந்திருந்தால் அவரை உடனே அங்கிருந்து அனுப்ப சொல்லிவிடுவாராம்.
பல மணி நேரம் சாயாமலும், கீழே உட்காராமலும் நின்று கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பாராம் வடிவேலு. இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். இவர் பல வருடங்களாக சினிமாவில் இருப்பவர்.
இப்படி சக காமெடி நடிகர்களை கேவலமாக நடத்திய வடிவேலு கலந்த பல வருடங்களாக வாய்ப்பு இன்றி சும்மா இருந்தார். லைக்கா நிறுவனம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் உருவானது. ஆனால், படமோ பிளாப் ஆனது.

vadivelu
அதேபோல், வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த நடிகர் போண்டா மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு உதவி எதாவது செய்வேன் என பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டு சென்றார் வடிவேலு. ஆனால், அவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்து உதவில்லை.
இதுதான் வடிவேலு துணை காமெடி நடிகர்களை நடத்தும் விதம் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணதாசனை குடிகாரன் என்று திட்டியதால் உருவான கிளாசிக் பாடல்… இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??