அரசியலில் விட்டதை பிடிக்க பலமாக களமிறங்கிய உலகநாயகன்.! உதவும் மோகன்லால், மம்முட்டி....!

by Manikandan |
Kamal
X

நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மையம் எனும் கட்சி யின் மூலம் அரசியலில் களம் இறங்கியுள்ள கமல்ஹாசன், நடைபெற்று முடிந்த தமிழக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் தொடர்ச்சியாக கட்சி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் அரசியலில் விட்டதை திரையுலகில் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மலையாள திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக வலம் வரும் மம்முட்டி மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.

நெட்ப்ளிக்ஸ் உருவாக்கக்கூடிய பிரமாண்டமான ஆந்தாலஜியில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கதைகள் எம்.டி. வாசுதேவன் அவர்களின் படைப்பில் இருந்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களும் சிறிய வேடத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Next Story