இன்றளவும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாக விளங்குபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவரது படங்கள் போட்ட பாதையில் தான் தமிழ் சினிமாவே பயணித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இவரது படங்களில் தாய்ப்பாசத்திற்கும் சண்டைக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் இவரை கொண்டு சேர்த்தது. ஆரம்ப காலத்தில் நாடக நடிகராக தொடங்கியது இவரது திரைப்பயணம்.
பின்னர் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து முழு நீள கதாநாயகனாக உருவெடுத்தார். நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது மட்டுமில்லாமல் அவ்வப்போது ஏற்படும் பசியையும் போக்கியவர் சின்னப்ப தேவர். இவரும் சின்னப்ப தேவரும் நீண்ட கால நண்பர்கள். இருவருக்கும் சாலிவாகனன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்பிற்கு ஆளாகிறார் எம்.ஜி.ஆர்.
பின்னர் தேவர் எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ”உங்களுக்கு திறமை இருக்கிறது நீங்கள் நல்ல நிலைமைக்கு வருவீர்கள் ”என்று கூறினார். அவர் வாக்கு பலிக்கும் படியே பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த எம்.ஜி.ஆர். பின்னர் எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவருக்கு தேதி கொடுத்து உதவினார். அதனைத் தொடர்ந்து பல படங்கள் எம்.ஜி.ஆர் சின்னப்பா தேவரின் படங்களின் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்ததிலேயே தேவர் பிலிம்ஸ்க்கு தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.
பின்னர் எம்.ஆர் ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைப்பட்ட தகராறு காரணமாக எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். 1967 ஆம் ஆண்டு இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது திரைதுறையில் பலர் எம்.ஜி.ஆருக்கு இனி பேச்சு வருமா.. இனி எம்.ஜி.ஆர் ஆல் நடிக்க முடியுமா.. அவருடைய திரையுலக வாழ்வே முடிந்தது..என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
அந்த சமயத்தில் சின்னப்ப தேவர் விவசாயி படத்திற்காக அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க சென்றார். எம்.ஜி.ஆர் நடிக்க நிச்சயம் இல்லாத இந்த சமயத்தில் அவருக்கு இந்த பணத்தை கொடுக்க வேண்டுமா..? அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டுமா..? என்று பலர் சின்னப்ப தேவருக்கு கேள்வி எழுப்பினர். எம்.ஜி.ஆர் நடித்த தாய்க்குப்பின் தாரம் படத்திற்கு பின் தான் என்னால் முழுசாக சாப்பிட முடிந்தது என்று கனீர் குரலில் கூறிவிட்டு அட்வான்ஸ் தொகை கொடுத்தார். இதிலிருந்து எம்.ஜி.ஆருக்கும் சின்னப்ப தேவருக்கும் இடையே இருந்த நட்பு அனைவருக்கும் எடுத்துரைத்தது.
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…
மழை வருவதற்கு…